Sunday, November 20, 2022

#40 - 102-103-104 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

102. ஸ்ரீ ஸர்வாத3யே நம:

ஸமஸ்தவனு 4க்ஷண மாடு3ஸர்வாதி3நமோ

பி3ரம்மஸூத்ரோக்த அத்தாசராசர க்3ரஹணாத் எந்து3

ஸமஸ்த ஜக3த் உத்பாத3 மொத3லாத3வுக3ளிகெ3

நீ முக்2யகாரண ஜன்மாத்3யஸ்யயத: நாராயண 

அனைத்தையும் உண்பவனே ‘ஸர்வாதியே உனக்கு நமஸ்காரங்கள். ‘அத்தா சராசர க்ரஹணாத் என்று பிரம்ம ஸூத்ர பாஷ்யமும் இதையே சொல்கிறது. அனைத்து உலகங்களின் ஸ்ருஷ்டி முதலான காரியங்களுக்கு நீயே முக்கிய காரணம். ‘ஜன்மாத்யஸ்யயத:’ என்னும் பாகவத முதல் ஸ்லோகமும் இதையே சொல்கிறது. நாராயணனே. 

103. ஸ்ரீ அச்யுதாய நம:

அளிவு இல்லத3 ஸுக2ஸ்வருபஅச்யுதனேநமோ

காலதே3 கு3 நிமித்த நா நினகெ3 இல்ல

களங்கவில்லவு ஶோகவில்லவு ஶுக்ர நிர்தோ3

காலுகை மத்4 ஶிராங்கா3ங்க்3யபி4ன்ன ஸுக2மயனு 

அழிவில்லாத ஸுக ஸ்வரூபனே. ‘அச்யுதனே உனக்கு என் நமஸ்காரங்கள். கால, தேச, குண நிமித்தமான அழிவுகள் உனக்கு என்றுமே இல்லை. களங்கங்கள் இல்லாதவன். சோகம் இல்லாதவன். ஶுக்ரனே. தோஷங்கள் அற்றவனே. கால், கை, நடுப்பகுதி, தலை என அனைத்து அங்கங்களிலும் சுகமயனாக இருப்பவனே. 

104. ஸ்ரீ வ்ருஷாகபயே நம:

4க்தேஷ்டவர்ஷகனு எல்லு ஸுகா2னுப4 நீனு

ஒத3கி3ஸுவிவ்ருஷாகபியேநமோ நமோ எம்பெ3

ஸதா3 ஸர்வத்ர நின்னய ரூபக3ளு ஸர்வத3லு

பே4தா3தி3 ந்யூனதெ இல்லத3 ஸுகா2னுப4 பூர்ண 


பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவனே. அவர்களுக்கு அனைத்து சுகானுபவங்களை கொடுப்பவனே. ‘வ்ருஷாகபியே உனக்கு நமஸ்காரங்கள். எப்போதும், அனைத்து இடங்களிலும், உன் ரூபங்கள் இருக்கின்றன. அனைத்திலும் எவ்வித பேதங்களும் இன்றி, எவ்வித குறைகளும் இன்றி நீ இருக்கிறாய். ஸுகானுபவங்கள் நிறைந்தவனே.

***

No comments:

Post a Comment