Tuesday, November 22, 2022

#42 - 108-109-110 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

108. ஸ்ரீ வஸுமனஸே நம:

ஸேவிஸுவ 4க்தனலி யுக்தஹிதகர மனஸ்

இடு3 ஸுஹ்ருத3னுவஸுமனாநமோ நினகெ3

த்3ரவ்ய பூ1 2 பத்ர உத3 4க்தியிம் அர்ப்பிபர

யோக3க்ஷேம வஹிஸுவ 3யாளுவே ஸ்ரீரமண 

வணங்கும் பக்தர்களில், இதமான கருணை கொண்ட மனதினை வைக்கும் ‘வஸுமனா உனக்கு என் நமஸ்காரங்கள். இலை, பூ, பழம், தண்ணீர், என எதையும் பக்தியுடன் அர்ப்பிக்கும் பக்தர்களுக்கு அவர்களின் நலனை காக்கும் கருணைக்கடலே, ஸ்ரீரமணனே. 

109. ஸ்ரீ ஸத்யாய நம:

ஸாது4 ஸஜ்ஜன 4க்தரிந்த்4யாத ஜிக்ஞாபித ஸ்துத

மோதா3தி3 ஸத்கு3 கீர்த்தன ஹொந்து3வந்தஹ நீனு

ஸத்யநினகெ3 நமோ ஆப்தகாம அனபேக்ஷனு

ஶ்ருதிவுக்தஸத்யம் ஞானம் அனந்தம்கு3ணபூர்ணனு 

ஸாது, ஸஜ்ஜன பக்தர்களால் வணங்கப்படுபவனே. மகிழ்ச்சி முதலான நற்குணங்களைக் கொண்டவனே. கீர்த்தனைகளால் அடையப்படுபவனே. ‘ஸத்யனே உனக்கு நமஸ்காரங்கள். நெருங்கிய நண்பனே. எதையும் எதிர்பார்க்காதவனே. ‘ஸத்யம் ஞானம் அனந்தம் என்னும் ஶ்ருதி மந்திரத்தால் விளக்கப்படுபவனே. நற்குணங்கள் நிறைந்தவனே. 

110. ஸ்ரீ ஸமாத்மனே நம:

பூர்ணனு அனன்யாதீ4 ஸர்வோத்தமனு ஸமாத்மா

நினகெ3 நமோ நமோ எம்பெ3னு ஸமாதி4 ஶூன்ய

பூர்ணஸாரத்வதி3ந்த3 ஸர்வோத்தமனு நாராயண

நின்னதீ4னவாகி3ஹரு ரமா மத்து பி3ரம்ம ருத்3 

பூர்ணனே. யாருக்கும் அதீனம் இல்லாதவனே. ஸர்வோத்தமனே. ‘ஸமாத்மனே உனக்கு நமஸ்காரங்கள். உனக்கு ஸமமோ / அதிகமோ யாரும் இல்லாதவனே. முழுமையான ஆளுமையைக் கொண்டிருப்பதால் ஸர்வோத்தமனாக இருப்பவனே. நாராயணனே. ரமாதேவி, பிரம்ம, ருத்ரர் ஆகியோர் உன்னுடைய அதீனமாக இருப்பவர்களே ஆவர்.

***


No comments:

Post a Comment