ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
60. ஸ்ரீ லோஹிதாக்ஷாய நம:
ராஜஸரிகெ3 ஆஸ்ரய ‘லோஹிதாக்ஷ’ நமோ எம்பெ3
ராஜ ராஜேஶ்வரனே கெங்க3ண்ணு தோரிஸுத நீனு
துர்ஜனரிகெ3 பீ4தி இத்தவர நிக்3ரஹ மாடி3
ஸஜ்ஜனர ரக்ஷிஸுவி பத்3மபத்ர ஆயதாக்ஷ
ராஜஸர்களுக்கு கதியினைக் கொடுப்பவனே ‘லோஹிதாக்ஷ’னே உனக்கு நமஸ்காரங்கள். ராஜ ராஜேஸ்வரனே. கெட்டவர்களுக்கு உன் சிவந்த கண்களைக் காட்டி, அவர்களை அழித்து, ஸஜ்ஜனர்களை காக்கிராய். தாமரைக் கண்ணனே.
61. ஸ்ரீ ப்ரதர்த்த3னாய நம:
ப4க்தர இஷ்டப்ராபக ‘ப்ரதர்த்த3ன’ நமோ எம்பெ3
ப4க்தரு இஷ்ட ஸாத4ன சலிஸுவ காலத3ல்லி
ப3ந்த3 உபடள விக்4ன ஶத்ருக3ள நிவாரிஸி
ப4க்தர்கெ3 ப்ரஸாத3வீவி ப்ரக்ருதி ப3ந்த4 கடிது3
பக்தர்களால் விரும்பப்படுபவனே. ப்ரதர்த்தனனே. உனக்கு நமஸ்காரங்கள். பக்தர்கள் விருப்பப்பட்டு ஸாதனைகளை செய்யும்போது, வரும் தடைகளை போக்கி, எதிரிகளை விலக்கி, பக்தர்களுக்கு - சம்சார பந்தனத்தை விலக்கி - பிரஸாதம் அளிப்பவனே.
62. ஸ்ரீ ப்ரபூ4தாய நம:
ப்ரக்ருஷ்டோத்தமனாகி3ருவி ‘ப்ரபூ4த’ நமோ எம்பெ3
ஶுத்3த4னு பூர்ணனு யாரூனு நினகெ3 ஸமரில்ல
உருகு3ணார்ணவ விஶ்வவ்யாபகனு ஈஶ நீனு
த்3ரௌபதீ3 வரத3 முக்2யகாரண ஸ்வாமி ஸ்வதந்த்ர
***
ஸர்வோத்தமனாக இருக்கிறாய். ‘ப்ரபூத’னே உனக்கு நமஸ்காரங்கள். பரிசுத்தமானவன். பூர்ணன். உனக்கு யாருமே சமம் இல்லை. சிறந்த குணங்களைக் கொண்டவன். உலகம் முழுக்க வ்யாப்தன் ஆனவன். ஈசன் நீயே. திரௌபதிக்கு வரம் (அபயம்) அளித்தவன். அனைத்திற்கும் முக்ய காரணன். ஸ்வாமி. ஸ்வதந்த்ரன் நீயே.
No comments:
Post a Comment