ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
48. ஸ்ரீ ஹ்ருஷிகேஶாய நம:
இந்தி3ரியக3ளிகெ3 ஸ்வாமி ‘ஹ்ருஷிகேஶ’ நமோ எம்பெ3
இந்தி3ரியாபி4மானிக3ளொளு இத்து நியமிஸுவி
இந்தி3ரெகு3 பி3ரம்மனிகு3 ப4க்தஜன ஸர்வரிகு3
மந்த3ரோத்3த4ர நீனு யதா2யோக்3ய ஹர்ஷவன்னீவி
இந்திரியங்களின் ஸ்வாமியே ஹ்ருஷிகேஶனே உனக்கு நமஸ்காரங்கள். இந்திரிய அபிமானிகளில் இருந்து
கொண்டு, நீ அவர்களை வழி நடத்துகிறாய். ஸ்ரீலட்சுமிக்கும், பிரம்மனுக்கும் மற்றும் உன்
பக்தர்கள் அனைவருக்கும் அவரவர்களின் யோக்யதைக்கேற்ப அவரவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறாய்.
மந்தரோத்தரனே.
49. ஸ்ரீ பத்மனாபா4ய நம:
பத்மஸம்ப4வ வேத3 கா3யனதி3 ஸ்துதிஸுவந்த2
வேத3வாக்யக3ளல்லி இருவி ப்ரதிபாத்3யனாகி3
‘பத்மனாப4னே’ நமோ விஶ்வ ஆஶ்ரய முக்2யஸ்வாமி
ஜ்யோதிர்மய ஞானத3னே த3யதி3 பாலயமாம்
பிரம்மனானவர், வேதங்களால் உன்னை துதிக்கிறார். அத்தகைய
ஸ்துதி வாக்கியங்களில் நீ இருக்கிறாய். அந்த வேதங்களில் பிரதிபாத்யன் நீயே. பத்மனாபனே
உனக்கு நமஸ்காரங்கள். உலகிற்கே நீயே கதி. முக்கிய ஸ்வாமியே. ஜ்யோதிர்மயனே. ஞானத்தை
அளிப்பவனே. என்னை கருணையுடன் அருள்வாயாக.
50. ஸ்ரீ அமரப்ரப4வே நம:
தீ3ர்க்கா4யுஷீயரிகெ3 ஸ்வாமியே ‘அமர ப்ரப4வே’
பாகி3 ஶிர நமோ எம்பெ3 பாஹிமாம் பாஹி த3யதி3
வாகீ3ஶ ஹனுமதா3தி3க3ள ப்ரபு4 சின்மயனே
ஸுக2மயனே ஸுக2ஞான தா3தனே நமோ எம்பெ3
தீர்க்க ஆயுள் கொண்டவர்களுக்கு ஸ்வாமியே. அமர ப்ரபுவே,
தலை வணங்கி உன்னை வணங்குகிறேன். என்னை அருள்வாயாக. பிரம்ம, வாயு முதலான அனைவரின் தலைவனே.
சின்மயனே. ஸுகமயனே. சுக, ஞான ஆகியவற்றை அருள்பவனே. உன்னை வணங்குகிறேன்.
***
No comments:
Post a Comment