[பத்யம் #104] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் 104]
அஷ்2டவித3 ஸம்பத் ப்ரதா4தன
அஷ்2டாங்க3க3ள்யோக3 ப3லதி3ம்
தஷ்2ட த3ளதி3ந்த3ரளி ஶோபி4ப1 ஹ்ருதயகமலத3லி |
அஷ்2ட வெரடு3பசார பூர்வக
அஷ்2டபா4வத3 புஷ்பவர்ச்சிஸி
அஷ்2டபா4வ பொந்தி3 ஸுகி2பரு ஶ்ரேஷ்ட கோவித3ரு ||104
அஷ்டவித ஸம்பத் - அன்ன, அர்த்த, விபவ, தாருண்ய, லாவண்ய, அஹங்கார, ஸாஹஸ, ப்ரபுத்வ - ஆகிய அஷ்ட விதமான செல்வங்களை; ப்ரதாதன - கொடுப்பவனை; அஷ்டாங்aககள் யோக பலதிம் - இந்திரிய நிக்ரஹ, நியம, ஆஸன, பிராணாயாம, ப்ரத்யஹார, தாரண, த்யான, ஸமாதி அஷ்ட தளதிந்த - எட்டு தளங்களால்; அரளி - மலர்ந்து; ஷோபிப - அழகாக காட்சி தரும்; ஹ்ருதய கமலதலி - இதய கமலத்தில்; அஷ்ட வெரடு உபசார - 16 உபசாரங்கள்; பூர்வக - செய்து; அஷ்டபாவத புஷ்ப - அகிம்சை, இந்திரிய நிக்ரஹம், அனைவரிடமும் கருணை, சகிப்புத்தன்மை, ஞானம், தவம், தியானம் மற்றும் ஸத்யம்; அர்ச்சிஸி - இவற்றைக் கொண்டு அர்ச்சனை செய்து; அஷ்டபாவ பொந்தி - மேற்கண்ட அஷ்ட பாவங்களைப் பெற்று; ஸ்ரேஷ்ட கோவிதரு - சிறந்த அறிஞர்கள்; ஸுகிபரு - சுகமாக இருப்பார்கள்.
எட்டாம் எண்ணின் சிறப்பினை விளக்கியவாறு, அத்தகைய பக்குவமடைந்த பக்தர்கள், ஸ்ரீஹரியை இவ்வாறாக பூஜித்து, சுகமாக இருப்பார்கள் என்பதை ஸ்ரீரமாகோவிந்த விட்டல தாஸர் இந்த பத்யத்தில் விளக்கியிருக்கிறார்.
***