[பத்யம் #82] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #82]
ஜனிஸி போகு3வ தே3ஹ க3ணிஸதெ3
ஜனுமக3ள ப3ஹு த4ரிஸி ஸத் ஸா
த4னெய கெ3ய்வுதெ3 ஸத்வஜீவிய ஸாத4னத3 ஆயு |
இனிது காலவனெணிஸி யோக்3யதெ
க3னுகு3ணத3 லக்ஷணவ காணுத
அனுனயதி3 திளியுவுது3 தே3ஹிய பா3ல்ய வ்ருத்3தா4ப்ய ||82
ஜனிஸி போகுவ தேஹ - (இந்த பிறவியில்) வந்து போகும் தேகம் பற்றி; கணிஸதெ - எண்ணாமல் (கவனிக்காமல்) ; பஹு - பற்பல; ஜனுமகள - பிறவிகளை; தரிஸி - எடுத்து; ஸத் ஸாதனெய கெய்வுதே - நல்ல ஸாதனைகளை செய்வதே; ஸத்வஜீவிய - ஸத்வ ஜீவனின்; ஸாதனத ஆயு - ஸாதன ஆயுள் ஆகும்; இனிது காலவனெனிஸி - (ஸாதன செய்வதற்கு இதுவே) சரியான காலம் என்று எண்ணி; யோக்யதெக அனுகுணத - தங்களின் யோக்யதைகேற்பதான; லக்ஷணவ காணுத - செயல்களை கண்டறிந்து (அவற்றை செய்பவர்களை); தேஹிய பால்ய வ்ருத்தாப்ய - இத்தகைய தேகம் கொண்டவர்களை, பாலகன்; அனுனயதி திளியுவுது - என்று தெளிவாக அறிய வேண்டும்.
இந்தப் பிறவியில் வந்திருக்கும் தேகத்தைப் பற்றி எண்ணாமல், பற்பல பிறவிகளை எடுத்து, நல்ல ஸாதனைகளை செய்வதே, ஸத்வ ஜீவனின் ஸாதன ஆயுள் ஆகும். அத்தகைய ஸாதனைகளை செய்வதற்கு இதுவே சரியான காலம் என்று எண்ணி, தங்களின் யோக்யதைகளுக்கு ஏற்ப, செயல்களை கண்டறிந்து, அவர்களது ஸாதன ஆயுள் (ஸாதனை சரீரத்தின் வயது) என்ன என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
இந்த பௌதிக தேகத்தின் ஆயுள் என்ன என்பது நமக்குத் தெரியும்; இத்தகைய செயல்களை செய்தால், இவ்வளவு வயது ஆகியிருக்கிறது என்பதையும் நாம் அறிகிறோம். அதாவது 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க்கிறார் என்றால் 15-16 வயது என்றும்; மேற்படிப்பு படிக்கிறார் என்றால் 22-23 வயது என்றும்; வேலையிலிருந்து ஓய்வு பெறுகிறார் என்றால் 58-60 வயது என்றும் சில உதாரணங்களை சொல்லலாம்.
ஆனால், அது போல, ஸாதன ஷரீரத்திற்கும் வயது சொல்லமுடியுமா? என்றால், முடியும் என்று சொல்லி, அடுத்து வரும் பத்யங்களில், ஜீவன் எத்தகைய ஸாதனங்களை செய்தால், அவன் எந்த ‘ஸாதன வயதில்’ இருக்கிறான் என்பதை சொல்கிறார். பௌதிக ஷரீரத்திற்கும், ஸாதன ஷரீரத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதை நாம் பார்க்கப்போகிறோம்.
****
No comments:
Post a Comment