[பத்யம் #95] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #95]
பா4க3வதரெனிபிவர மாதுக3
ளாக3ம ஷ்ருதிவாக்1ய தே3ஹவு
யோகி3னுதகா3ஸ்ரயவு பூஜாயோக்3ய சலப்ரதிமெ |
பா3கி3தொ3டெ3 இவரடி3கெ3 ஶிரவனு
நீகு3வுது3 ப4வரோக3 பா3தெ4யு
போ4கி3வர பர்யங்கஶயனன க்ருபெகெ3 காரணவு ||95
பாகவதரெனிப - பாகவதர் எனப்படும்; இவர மாதுகளு - இவர் பேசும் பேச்சுகள்; ஆகம ஷ்ருதி வாக்ய - ஆகம ஸ்ருதி வாக்கியங்களே ஆகின்றன; யோகினுதகெ - யோகி எனப்படுவதற்கு; ஆஷ்ரயவு - சமமானது; தேஹவு - இவரது தேகம்; பூஜாயோக்ய - பூஜைக்குத் தக்கதான; சலப்ரதிமெ - சலபிரதிமை எனப்படுகிறது; இவரடிகெ - இவரின் பாதங்களில்; ஷிரவனு - தலையை; பாகிதொடெ - குனிந்து வணங்கினால்; பவரோக பாதெயு - மறுபிறப்பு என்னும் தொல்லை; நீகுவுது - நீங்குகிறது; போகிவர - சேஷதேவரே; பர்யங்கஷயனன - படுக்கையாகக் கொண்டவனின் (ஸ்ரீஹரியின்); க்ருபெகெ - கருணைக்கு; காரணவு - இது காரணம் ஆகும்.
இத்தகையவர்களை நாம் சந்தித்தால், வணங்கினால் என்ன பலன் கிடைக்கிறது என்பதை ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் இந்த பத்யத்தில் விளக்குகிறார்.
பாகவதர் எனப்படும் இத்தகையவர் பேசும் பேச்சுகள், ஆகம ஸ்ருதி வாக்கியங்களே ஆகின்றன. இவர்களை யோகி எனலாம். இவர்களது தேகம் பூஜைக்குத் தக்கதான சலப்ரதிமெ எனப்படுகிரது. இவர்களின் பாதங்களில் தலையை குனிந்து வணங்கினால், மறுபிறப்பு என்னும் தொல்லை நீங்குகிறது. சேஷதேவரே படுக்கையாகக் கொண்டவனின் (ஸ்ரீஹரியின்) கருணைக்கு இதுவே காரணம் ஆகும்.
இதை ஸ்ரீஜகன்னாததாஸர் ஹரிகதாம்ருதஸாரத்தில் இவ்வாறு விளக்குகிறார்.
ஏனு மாடு3வ புண்ய பாபக3
ளானெ மாடு3வெனெம்பு3வ னத4ம
ஹீனகர்மகெ பாத்ர நா புண்யக்கெ ஹரியெம்ப3
மானவனு மத்4யமனு த்3வந்த்3வகெ
ஸ்ரீனிவாஸனெ கர்த்ருவெந்து3 ஸ
தா3னுராக3தி3 நெனெது3 ஸுகி2ஸுவவனெ நரோத்தமனு ||(13-8)
தான் செய்த பாவ புண்ணியங்களை, ஸ்வதந்திரமாக தானே செய்தேன் என்று நினைப்பவன் மனிதர்களில் அதமன் (கீழானவன்). பாவம் செய்பவன் நான், புண்ணியத்தை செய்விப்பவன் பரமாத்மன் என்று நினைப்பவன் மத்யமன். ஏனெனில், ஜீவர்களுக்கு ஸ்வதந்த்ர கர்த்ருத்வம் இல்லை என்றானபிறகு, பாவம் மட்டும் எப்படி அவனால் செய்ய முடியும்? ஆகையால், பாவமோ புண்ணியமோ, அனைத்திற்கும் காரணம் பரமாத்மனே என்று அந்த பலன்களை பரமாத்மனிடம் ஒப்பித்து, அவனையே நினைத்தவாறு சுகப்பட்டுக் கொண்டிருப்பவனே மனுஷ்யோத்தமன் ஆவான்.
ஈ உபாஸனெகை3வ ரிளெயொளு
தே3வதெக3ளல்லத3லெ நரர
ல்லாவ ப3கெ3யிந்தா3த3ரிவரர்சனவெ ஹரிபூஜெ |
கேவல ப்ரதிமெக3ளெனிபரு ர
மாவினோதி3கெ3 இவரனுக்3ரஹ
வெ வரானுக்3ரஹவெனிஸுவுது முகுதியோக்3யரிகெ3 ||(13-9)
அனைத்தையும் செய்வது பரமாத்மனே என்று உபாசனை செய்பவர்களை, இந்த பூமியில் தேவதைகள் என்று அறிந்து, அனைத்து விதங்களிலும் அவரின் பூஜையை செய்தால், அது சாட்சாத் பரமாத்மனின் பூஜையென்றே ஆகிறது. இவர்களை பகவந்தனின் சல-பிரதிமை என்றே நினைக்க வேண்டும். முக்தி யோக்யர்கள் இவரின் அருளைப் பெற்று, அதையே பரமாத்மனின் அருள் என்று நினைக்க வேண்டும்.
***
No comments:
Post a Comment