[பத்யம் #91] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #91]
ஸாத4னத3 வ்ருத்3தா4ப்1ய ஸார்த்த2க
கெ3ய்து3 ஸாத4ன பூர்ண மாடி3த3
ஸாது4க3ளு இவரெந்து3 திளிவுது3 பே4த3வெணிஸத3லெ |
ஆதி3மூருதி விஜயஸக2ன ப்ர
ஸாத3 படெ3த3தி1மோத3தி3ந்த3லி
மேதி3னியமே3லிர்து3 ஸுஜனகெ ஹாதி3 தோருவரு ||91
(இத்தகையவர்கள்) ஸாதனத - ஸாதனையின்; வ்ருத்தாப்ய - காலத்தினை; ஸார்த்தக கெய்து - அற்புதமாக நிறைவேற்றி; ஸாதன பூர்ண மாடித - தங்கள் ஸாதனைகளை பூர்த்தி செய்துகொண்ட; ஸாதுகளு - அறிஞர்; இவரெந்து - இவரே என்று; பேதவெணிஸதலெ - எவ்வித சந்தேகமும் இல்லாதவாறு; திளிவுது - அறிய வேண்டும்; ஆதிமூருதி - ஆதி மூர்த்தியான; விஜயஸகன - ஸ்ரீகிருஷ்ணனின்; ப்ரஸாத படெது - தரிசனத்தை (அருளை) பெற்று; அதி மோததிந்தலி - மிகவும் மகிழ்ச்சியுடன்; மேதினியமேலிர்து - இந்த பூமியில் வாழ்ந்து; ஸுஜனகெ - ஸஜ்ஜனர்களுக்கு; ஹாதி தோருவரு - நல்வழியைக் காட்டுகிறார்கள்.
இத்தகையவர்கள், ஸாதனையின் காலத்தினை அற்புதமாக நிறைவேற்றி, தங்கள் ஸாதனைகளை பூர்த்தி செய்துகொண்ட இவரே அறிஞர் என்று, எவ்வித சந்தேகமும் இன்றி அறிய வேண்டும். ஆதி மூர்த்தியான ஸ்ரீகிருஷ்ணனின் தரிசனத்தை / அருளைப் பெற்று, மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த பூமியில் வாழ்ந்து, ஸஜ்ஜனர்களுக்கு நல்வழியைக் காட்டுகிறார்கள்.
****
No comments:
Post a Comment