[பத்யம் #86] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #86]
தத்வவனு தன்னொளகெ3 தர்க்கிஸி
ஹொத்து ஹொத்திகெ3 அளலி ப3ளலுத
நித்ய ஸுக2 ஸம்ப்ராப்திகோ3ஸுக3 ஸதத யத்னிஸுத |
தத்தளிப ஆ நரனு மர்த்யதி3
தெத்திரலு தன்னாயுமானவ
தத்வவேத்தரு திளிவரவனனு ப்ராயத3வனெந்து3 ||86
தத்வவனு - ஸ்ரீமதாசார்யரின் தத்வங்களை; தன்னொளகெ தர்க்கிஸி - தனக்குள்ளெ தர்க்கம் செய்து; ஹொத்து ஹொத்திகெ - அனைத்து சமயங்களிலும்; அளலி பளலுத - அழுது புரண்டவாறு; நித்ய ஸுக - முக்தி; ஸம்ப்ராப்திகோஸுக - அடைய வேண்டும் என்பதற்காக; ஸதத யத்னிஸுத - எப்போதும் முயற்சி செய்தவாறு; தத்தளிப ஆ நரனு - இருப்பவனான அந்த மனிதன்; தன்னாயுமானவ - தன் ஆயுட் காலத்தை; மர்த்யதி - பிற மனிதர்களுடன்; தெத்திரலு - சேர்ந்திருக்க; தத்வவேத்தரு - தத்வாபிமானி தேவதைகள்: அவனனு- அவனை; ப்ராயதவனெந்து - வாலிபன் என்று; திளிவரு - அறிவார்கள்.
ஒரு தக்க குருவின் மூலமாக கற்றறிந்த ஸ்ரீமதாசார்யரின் தத்வங்களை, தனக்குள்ளே தர்க்கம் செது, அனைத்து சமயங்களிலும் அழுது புரண்டவாறு, முக்தி அடைய வேண்டும் என்பதற்காக, எப்போதும் முயற்சி செய்தவாறு, இருப்பவனான அந்த மனிதன், தன் ஆயுட் காலத்தை இவ்வாறாக பிற மனிதர்களுடன் கழிப்பவன், தத்வாபிமானி தேவதைகளால், வாலிபன் என்று அழைக்கப்படுகிறான்.
ஸாதனைக்கான படியில், அடுத்த நிலையில் இருப்பவர்களை ‘வாலிபன்’ என்று கூறி, அவர்கள் செய்யும் / செய்ய வேண்டிய செயல்களை இந்த இரு பத்யங்களிலும் விளக்கியிருக்கிறார் ஸ்ரீதாஸர்.
****
No comments:
Post a Comment