Friday, August 5, 2022

[பத்யம் #85] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #85] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #85]

4த்3ரக3தியனு மனதி3 3யஸுத

பத்34தியனனுஸரிஸி மானவ

மத்4 விரசித தத்வஸாரவ ஸத்கு3ரு த்3வாரா

ஶுத்34து3பதே33லி திளியுத

ஶ்ரத்3தெ3யிந்த3லி க்3ரஹிஸி வித்4யெய

ஹ்ருத்3குஹாவாஸியனு காம்பு3 ஹம்ப3லனு தாளி ||85 

பத்ரகதியனு - முக்திக்கான வழியை; மனதி பயஸுத - மனதில் விரும்பியவாறு; பத்ததியனனுஸரிஸி - அதற்கான தக்க வழிகளை அனுசரித்து; மானவ - மனிதனானவன்; ஸத்குரு த்வாரா - ஒரு நல்ல குருவின் மூலமாக; மத்வ விரசித  - ஸ்ரீமதாசார்யர் கூறியுள்ள; தத்வஸாரவ - தத்வங்களின் ஸாரத்தினை; ஷுத்ததுபதேஷதலி - யதார்த்த ஞானத்தின் உபதேசம் மூலமாக; திளியுத - அறிந்து கொண்டு; ஷ்ரத்தெயிந்தலி - மிகவும் சிரத்தையுடன்; வித்யெய - அந்த வித்யையைக்ரஹிஸி - புரிந்து கொண்டு; ஹ்ருத்குஹாவாஸியனு - மனதில் இருப்பவனை; காம்புவ - காணும்; ஹம்பலனு தாளி - விருப்பத்தினைப் பெற்று; (அடுத்த பத்யத்தில் தொடர்கிறது). 

இந்த மற்றும் அடுத்த பத்யத்தில், குழந்தை, பாலகன் ஆகிய நிலைகளைத் தாண்டி, அடுத்த நிலையானப்ராயதவ - வாலிபன் என்னும் நிலையில் உள்ளவர்கள் செய்யும் செயல்களை சொல்கிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர். 

முக்திக்கான வழியை மனதில் விரும்பியவாறு, அதற்கான தக்க வழிகளை அனுசரித்து மனிதனானவன், ஒரு நல்ல குருவின் மூலமாக, ஸ்ரீமதாசார்யர் கூறியுள்ள தத்வங்களின் ஸாரத்தினை யதார்த்த ஞானத்தின் உபதேசம் மூலமாக அறிந்து கொண்டு, மிகவும் சிரத்தையுடன் அந்த வித்யையை புரிந்து கொண்டு, மனதில் இருக்கும் பிம்பமூர்த்தியை காணும் விருப்பத்தினைப் பெற்று பிம்ப உபாஸனை முறையை அறிந்து, அதற்கான பாதையில் செல்பவர்களை, ஸாதனை சரீரத்தின் அடுத்த படியில் இருப்பவர்கள் என சொல்லலாம். மேலும் அவர்கள் என்ன செய்கிறார்கள் / செய்ய வேண்டும் என்பதை அடுத்த பத்யத்திலும் தொடர்கிறார் ஸ்ரீதாஸர்

***

No comments:

Post a Comment