Wednesday, August 17, 2022

[பத்யம் #92] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #92] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #92]

அந்தரதி3 பா3ஹ்யத3லி ஸ்ரீஹரி

சிந்தனெயளோலயிஸி மனவனு

கந்துபிதனேகாந்த த்4யானதொ3ளாந்து1 முத3வன்னு |

ஸந்தததொ3ளீரீதி பரவ

ரந்திரலு லெக்கிஸரு ப்ராக்3ஞரு

ஸந்தெகூ113 தெரதி3 இஹஸுக2 3யஸுவக்3ஞரனு ||92 

அந்தரதி பாஹ்யதலி - உள்ளும் புறமும்; ஸ்ரீஹரி சிந்தனெயளு - ஸ்ரீஹரியைப் பற்றிய சிந்தனையிலேயே; ஓலயிஸி - ஈடுபட்டு; மனவனு - மனதினை; கந்துபிதன - ஸ்ரீஹரியின்; ஏகாந்த த்யானதொளாந்து - ஏகாந்தமான தியானத்தில் ஈடுபடுத்தி; ஸந்தததொளு - நிரந்தரமாக (எப்போதும்); முதவன்னு - மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்; ஈரீதி பரவஷரந்திரலு - இப்படியாக மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்; ஸந்தெகூடத தெரதி - காய்கறிச் சந்தையைப் போல; இஹஸுக பயஸுவ - இஹ சுகத்தினை விரும்பும்; அக்ஞரனு - அஞ்ஞானிகளை; ப்ராக்ஞரு - பகவத் பக்தர்களான ஞானிகள்; லெக்கிஸரு - புறக்கணிப்பார்கள். 

நன்கு பக்குவமடைந்த ஸ்ரீஹரி பக்தர்கள், எப்படி இருப்பார்கள் என்ன செய்வார்கள் என்று அவர்களின் லட்சணங்களை இந்த பத்யத்தில் கூறுகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர். 

உள்ளும் புறமும் ஸ்ரீஹரியைப் பற்றிய சிந்தனையிலேயே ஈடுபட்டு, இவர்கள் தங்களின் மனதினை ஸ்ரீஹரியின் ஏகாந்த தியானத்தில் ஈடுபடுத்தி, நிரந்தரமாக மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். எப்போதும், காய்கறிச் சந்தையைப் போல கூச்சலிட்டுக்கொண்டு, இஹ சுகத்தினை விரும்பும், அஞ்ஞானிகளை, பகவத் பக்தர்களான ஞானிகள் புறக்கணிப்பார்கள். 

இதை ஹரிகதாம்ருதஸாரத்தில் ஸ்ரீஜகன்னாத தாஸர் எவ்வாறு ஒரு பத்யத்தில் விளக்கியிருக்கிறார் என்பதை பார்க்கலாம். 

கன்னடி3 கைபிடி3து3 நோள்பன

கண்ணுக3ளு கண்ட3ல்லி எரக3தெ3

தன்ன ப்ரதிபி3ம்ப3வனெ காம்பு3 3ர்ப்பணவ பி3ட்டு |

4ன்யரிளெயொளகெ3ல்ல கடெ3யலி

நின்ன ரூபவ நோடி3 ஸுகி2ஸுத

ஸன்னுதிஸுதானந்த3 வாரிதி4யொளகெ3 முளுகி3ஹரு ||(31-13) 

கையில் கண்ணாடியைப் பிடித்து பார்த்தால், நம் கண்கள் கண்ட இடத்தில் பாயாமல், அதில் தெரியும் நம் பிரதிபிம்பத்தை மட்டுமே பார்க்கும். இப்படி சாதாரண மக்களான நாம், கண்ணாடியில் தெரியும் நம் பிரதிபிம்பத்தை பார்த்து மகிழ்கிறோம். ஆனால், உன் ஏகாந்த பக்தர்கள், கண்ணாடி இல்லாமலேயே, அனைத்து இடங்களிலும் வியாப்தனான, பிம்ப ரூபியான உன் ரூபத்தை, எங்கு வேண்டுமோ அங்கு பார்த்து, மகிழ்ச்சி அடைந்தவாறு, ஸ்தோத்திரம் செய்தவாறு, மகிழ்ச்சிக் கடலில் மூழ்குகின்றனர். ஆஹா, அவர்கள் எத்தகைய தன்யர்கள்!!.

***

No comments:

Post a Comment