[பத்யம் #99] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #99]
மூரு ரூபதி3 மூரு மாள்பன
மூரு மூர்த்திய மூரரிந்த3லி
மூரு காலதி3 மூரவஸ்தெ2 யொள் நித்ய த்4யானிஸுத |
மூரு ப3கெ3யிந்தே3கமாடு3த
மூரு வர்ணாத்மகன ப4ஜிபரு
மூரு க3தியனு மூரு வித4ரிகெ3 கடெ3யலீயுவன ||99
அடுத்து மூன்று என்ற எண்ணினைச் சொல்லி, அதன் மூலம் சில தத்வங்களை விளக்குகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர்.
மூரு ரூபதி - பிரம்மா, விஷ்ணு, ருத்ர; மூரு மாள்பன - ஸ்ருஷ்டி, ஸ்திதி, லய; மூரு மூர்த்திய - அக்ரேஷ, ப்ராணேஷ, மூலேஷ; மூரரிந்தலி - உடல், மனம், வாக்கு; மூரு காலதி - ப்ராத:கால, மத்யான்ன, மாலை; மூரவஸ்தெயொள் - ஜாக்ரத, நித்ரா, ஸ்வப்ன; மூரு பகெயிந்த - விஷ்வ, தைஜஸ, ப்ராக்ஞ; மூரு வர்ணாத்மகன - புருஷ ரூப த்ரய என்று இதற்கு அர்த்தம் கொள்ளலாம். (மஹத்தத்வாதிகளின் படைப்பிற்குக் காரணமான புருஷரூபம் 1, பிரம்மாண்டத்தில் நுழைந்த ரூபம் 2, நாபி கமலத்திலிருந்து பிரம்மதேவரைப் படைத்து, பத்பனாப என்னும் பெயரைப் பெற்ற புருஷ சூக்தத்தில் புகழப்பட்டுள்ள ரூபம் 3, என மூன்று புருஷ ரூபங்களை பாகவதம் விளக்குகிறது); மூரு கதியனு - ஸ்வர்க்க, மோக்ஷ, நரக; மூரு விதரிகெ -ஸாத்விக, ராஜஸ, தாமஸ.
இவ்வாறு பகவந்தனின் அத்யந்த பக்தர்கள், அனைத்து சமயங்களும், பகவந்தனை சிந்தித்தவாறே இருப்பார்கள் என்பதையும், அத்தகையவர்களுக்கு (கூடவே மூன்று விதர்களுக்கும்), பகவந்தன் தக்க பலன்களைக் கொடுக்கிறான்.
தா1 ரசிஸி ஸாத்வரிகெ3 ஸுக2 ஸம்
ஸார மிஸ்ரரிக3த4ம ஜனரிக3
பார து3க்க2க3ளீவ கு3ருபவமான ஸலஹெம்ம ||4
என்று ஸ்ரீஜகன்னாததாஸர், பவமானரை சொல்வது, பகவந்தனின் காரியங்களே என்று சிந்திக்க வேண்டும்.
****
No comments:
Post a Comment