[பத்யம் #103] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #103]
ஏளு ஹோதி3கெய பீ3ளு தே3ஹவ
ஏளு வாரதி3 போஷிஸதெ3 ம
த்தேளு குது3ரெயன்னேரி ப3ருவன உத3யகாலக்கெ |
ஏளுத1லெ எஸகு3வரு கர்மவ
ஏளு நாலிகெ3 யவனிகு3ணிஸலு
ஏலிகெ3ய ப1ருமஸுக2தொ3ளீவனு ஸ்ரீ லகுமீலோல ||103
ஏளு ஹோதிகெய - த்வக், சர்ம, மாம்ஸ, ரக்த, மேதஸ், மஜ்ஜை, அஸ்தி என்னும் ஏழு உறைகளைக் கொண்ட; பீளு தேஹவ - விழுந்துவிடும் இந்த தேகத்தினை; ஏளு வாரதி - வாரத்தின் ஏழு நாட்களில் (எப்போதும்) போஷித்துக் கொள்ளாமல் (சோம்பேறியாக இருக்காமல்); மத்தெ - மேலும்; ஏளு குதுரெயன்னேரி - காயத்ரி, உஷ்ணிக், அனுஷ்டுப், ப்ருஹதி, பங்க்தி, த்ரிஷ்டுப், ஜகதி - ஆகிய ஏழு குதிரைகளில் ஏறி வருபவனை (சூரியனை); ஏளுதலெ - வணங்கி (அர்க்யம் கொடுத்து); கர்மவ எஸகுவரு - கர்மத்தினை செய்பவர்கள்; ஏளு நாலிகெ - காலி, கராலி, மனோஜவா, ஸுலோஹிதா, ஸுதூம்ரவர்ண, ஸ்பலிங்கினி, விஷ்வருசி; யவனிகுணிஸலு - அக்னிக்கு உணவு அளிப்பவர்கள் (அக்னி கார்யம், ஹோமம், யக்ஞம் ஆகியவை செய்பவர்களுக்கு) ஏலிகெய - முன்னேற்றத்தின் பாதையைக் காட்டி; பருமஸுகதொளு - முக்தியில்; ஈவனு - வைப்பான்; ஸ்ரீலகுமிலோல - ஸ்ரீலட்சுமியின் தலைவனான ஸ்ரீஹரி.
தன் பக்தர்களை பகவந்தன் எப்படி அருள்கிறான் என்பதை ஏழு என்னும் எண்ணினைக் கொண்டு அற்புதமாக இந்த பத்யத்தில் விளக்கியிருக்கிறார் ஸ்ரீதாஸர்.
***
No comments:
Post a Comment