Monday, August 1, 2022

[பத்யம் #81] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #81] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #81]

ஸுத்தி 3ளலுத கர்மவதை3ம்

3த்துனாலகு லக் யோனிக3

ளெத்தி ஹரி கருணிஸலு 3ருவனு மனுஜ யோனியொளு |

தெ1த்தி1 3ஹு ஜன்மக3 இத3ரொளு

4க்தி ஞானத3 க்ரமதி3 பெ1ச்சிஸி

ப்4ருத்யனாத3 ஸுயோக்3 ஜீவனு காம்ப3 பி3ம்ப3வனு ||81 

ஸுத்தி பளலுத - எங்கெங்கோ (எப்படியோ) சுற்றித் திருந்து; கர்மவஷத - கர்ம வஷத்தினால்; எம்பத்துனாலகு லக் யோனிகளெத்து - 84 லக் யோனிகளில் பிறவிகளை எடுத்து; ஹரி கருணிஸலு - கடைசியில் ஸ்ரீஹரியின் அருளால்; மனுஜ யோனியொளு பருவனு - மனித யோனியில் வருகிறான்; பஹு ஜன்மகள தெத்தி - பல பிறவிகளை எடுத்து; இதரொளு - இவற்றில்; பக்தி ஞானத - பக்தி ஞானம் ஆகியவை; க்ரமதி பெச்சிஸி - படிப்படியாக வளர்ந்து; ப்ருத்யனாத - ஸ்ரீஹரியின் சேவகனான; ஸுயோக்ய ஜீவனு - தக்க யோக்யதையைக் கொண்ட ஜீவன்; பிம்பவனு - தன் பிம்பமூர்த்தியை; காம்ப - காண்பான். 

எங்கெங்கோ எப்படியோ சுற்றித் திரிந்து, கர்ம வஷத்தினால், 84 லட்ச யோனிகளில் பிறவிகளை எடுத்து, கடைசியில் ஸ்ரீஹரியின் அருளால், இந்த மனிதப் பிறவியில் ஜீவன் வருகிறான். பல பிறவிகளை எடுத்து, இவற்றில், பக்தி ஞானம் ஆகியவற்றை படிப்படியாக வளர்த்து, ஸ்ரீஹரியின் சேவகனான தக்க யோக்யதையைக் கொண்ட இந்த ஜீவன், தம் பிம்பமூர்த்தியை காண்பான். 

ஏஸு காயங்கள களெது 84 லட்ச யோனி

ஜீவ ராஷிகள தாடி பந்த ஷரீர

தானல்ல தன்னதல்ல - ஆஷெ தரவல்ல முந்தெ பாஹோதல்ல

தாஸனாகு விசேஷனாகு 

இத்தகைய அரிதாக வந்திருப்பதான பிறவியைப் பற்றி பல ஹரிதாஸர்களும் பாடியிருகின்றனர். முன்னர் எப்படி இருந்தோம் என்றும் தெரியாது; இத்தகைய பிறவி இனி அடுத்து வருமா என்றும் தெரியாது; ஆகையால், இப்போது நீ உடனடியாக ஸ்ரீஹரியின் தாஸன் ஆகு; விசேஷமான ஞானத்தைப் பெறுபவன் ஆகு; அதன் மூலம், ஸ்ரீஹரியின் அதாவது தன் பிம்பமூர்த்தியின் தரிசனத்தைப் பெறுபவன் ஆகுவாயாக.

***

No comments:

Post a Comment