Thursday, August 4, 2022

[பத்யம் #84] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #84] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #84]

மீரத3லெ விதி43ளனு நித்3ரா

ஹார வர்ஜிஸி வ்ரதகெ3ய்து3

ரீர 3ண்டி3ஸி பா3ஹ்ய தனுமன ஶுத்3தி4 ஸாத4னதி3 |

வாரிஜாக்ஷன கருண ஜயஸுத

தா4ருணியொளீரீதி1 இருவவ

தீ4ரக்ஞானிக3ளிந்த3 கரெஸுவ பாலகனு எந்து3 ||84 

விதிகளனு மீரதலெ - விதி / விதிமீறல்களை பின்பற்றியவாறு; நித்ரா ஹார வர்ஜிஸி - தூக்கம் / ஆகாரங்களை தவிர்த்து; வ்ரதகெய்து - விரதங்களை செய்து; ஷரீர தண்டிஸி - இந்த தேகத்தினை வருத்திக் கொண்டு; பாஹ்ய தனுமன - புற தேக, மனதின்; ஷுத்தி ஸாதனதி - சுத்தங்களை செய்தவாறு; வாரிஜாக்ஷன - ஸ்ரீஹரியின்; கருண ஜயஸுத - கருணையை ஜெயித்தவாறு; தாருணியொளு - பூமியில்; ரீதி - இப்படியாக; இருவவ - இருப்பவன்; பாலகனு எந்து - சிறுவன் என்று; தீர ஞானிகளிந்த - கற்றறிந்த ஞானிகளால்; கரெஸுவ - அழைக்கப்படுகிறான். 

ஸாதனைக்கான படியில், குழந்தை நிலையிலிருந்து அடுத்த படிக்கு முன்னேறியிருப்பவர்களை பாலகன் என்று அழைக்கின்றனர். அது என்ன என்றால்: 

விதி  மற்றும் விதிமீறல்களை பின்பற்றியவாறு, தூக்கம் ஆகாரங்களை தவிர்த்து, கடுமையான விரதங்களை செய்து, இந்த தேகத்தினை வருத்திக் கொண்டு, புற தேக மற்றும் மனதினை ஷுத்தி செய்தவாறு, ஸ்ரீஹரியின் கருணையை ஜெயித்தவாறு, இந்த பூமியில் இருப்பவன், ‘பாலகன் என்று ஞானிகள் கூறுகின்றனர். 

சந்தியாவந்தனம், ஏகாதசி உபவாசம், ஸ்ரீகோகுலாஷ்டமி விரதங்கள் மற்றும் பிற விரதங்களை விதிப்படி செய்து, புற தேக மற்றும் மனதினையும் சுத்தம் செய்து கொண்டிருப்பவர்கள், அடுத்த நிலையில்பாலகன் என்று அறியப்படுகிறார்கள் என்று ஸ்ரீதாஸர் கூறுகிறார்.

***

No comments:

Post a Comment