Monday, August 8, 2022

[பத்யம் #87] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #87] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #87]

அனுநயதி3 நிஜகு3ருவு லபி4ஸலு

ஜனும ஜனும ஜனுமாந்தரத3 வாஸனெ

யனுஸரிஸி 3ந்தி3ருவ ஶாஸ்த்ரார்த்த23ளு 4னதரதி3 |

க்ஷணதி3 கன்னடி3 கரதி3 பிடி33ந்

1னுப4வகெ1 3ந்தொ333லு நர

ஸுகி2ஸலவனனு ப்ராக்ஞரரிவரு தீ4 நரனெந்து3 ||87 

அனுநயதி - மிகவும் அன்புடன்; நிஜகுருவு - ஒரு உண்மையான குரு; லபிஸலு - கிடைக்க; ஜனும ஜனும ஜனுமாந்தரத - முன்னர் சென்ற மூன்று பிறவிகளின்; வாஸனெயனுஸரிஸி - சிந்தனைகளை அனுசரித்து; பந்திருவ - தற்போது வந்திருக்கும்; ஷாஸ்த்ரார்த்தகளு - சாஸ்திர அர்த்தங்கள் அனைத்தையும்; கனதரதி - மிகவும் விரைவாக; கன்னடி - ஒரு கண்ணாடியை; கரதி பிடிதந்த - பிடித்ததைப் போலான; அனுபவகெ - அனுபவத்தை; க்ஷணதி - ஒரு நொடிப்பொழுதில்; பந்ததொதகலு - வந்து சேர; நர ஸுகிஸலு - அந்த மனிதன் மகிழ்ந்திருக்க; அவனனு - அவனை; ப்ராக்ஞரு - அறிஞர்கள்; தீர நரனெந்து - (நன்கு வளர்ந்த) மனிதன்  என்று; அரிவரு - அறிவார்கள். 

வாலிபனுக்கு அடுத்த நிலையாகமனிதன் என்னும் நிலையில் லட்சணங்களை இந்த பத்யத்தில் கூறுகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர். 

மிகவும் அன்புடன், ஒரு உண்மையான குரு கிடைக்க, முன்னர் சென்ற மூன்று பிறவிகளின் சிந்தனைகளை அனுசரித்து, தற்போது வந்திருக்கும் சாஸ்திர அர்த்தங்கள் அனைத்தையும், மிகவும் விரைவாக ஒரு கண்ணாடியைப் போல அனுபவத்தை ஒரு நொடிப்பொழுதில் பெறுகிறான். இவ்வாறான அனுபவத்தைப் பெற்று, அந்த மனிதன் மகிழ்ந்திருக்க, அவனை அறிஞர்கள், ‘தீர நரன் மனிதன் என்று கூறுகிறார்கள்.

***


No comments:

Post a Comment