Tuesday, August 23, 2022

[பத்யம் #96] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #96] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #96]

இளெயொளிவரே 4ன்ய மான்யரு

திளியலாக3து3 நரரு இவரெந்3

தி3ளெயொளிளிதி3 தி3விஜரே ஸரி மனுஜ தே3ஹத3லி |

திளியுதீ1பரி வலிஸிகொள்வுது3

3ளிஸிஹரு தா3ஸத்வ ஸித்3தி4

கலியுக3தொ3ளுத்3தா4 கெ3ய்வரு மலின ஸுஜனரனு ||96 

இளெயொளிவரே - இந்த பூமியில் இத்தகையவரே; தன்ய மான்யரு - மிகவும் தன்யர், மரியாதைக்குரியவர்; நரரு இவரெந்து - இவர் சாதாரண மனிதர் என்று; திளியலாகது - அறியக்கூடாது; இளெயொளு - இந்த பூமியில்; இளிதிஹ - இறங்கியிருக்கும்; மனுஜ தேஹதலி - மனித தேகத்தில் உள்ள; திவிஜரே ஸரி - தேவதையே ஆகிறார்; திளியுதீபரி - இவ்வாறு தெரிந்து கொண்டு; வலிஸிகொள்வுது - அவரை தரிசனம் செய்ய வேண்டும்; தாஸத்ய ஸித்திய - தாஸத்வத்தின் ஸித்தியை; களிஸிஹரு - பெற்றிருக்கிறார்; (இப்படிப்பட்டவர்கள்) கலியுகதொளு - கலியுகத்தில்; மலின ஸுஜனரனு - பாமர மக்களை; உத்தார கெய்வரு - உத்தாரம் செய்கிறார்கள். 

இத்தகையவர்களின் மகிமைகளை மேலும் விளக்குகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர். 

இந்த பூமியில் இத்தகையவர்களே மிகவும் தன்யர். மரியாதைக்குரியவர். இவர் சாதாரண மனிதர் என்று அறியக்கூடாது. இந்த பூமியில் இறங்கியிருக்கும் மனித தேகத்தில் உள்ள தேவதையே ஆகிறார். இவ்வாறு தெரிந்து கொண்டு, இவரை தரிசனம் செய்ய வேண்டும். தாஸத்வத்தின் ஸித்தியை இவர் பெற்றிருக்கிறார். கலியுகத்தில், பாமர மக்களை உத்தாரம் செய்வதற்காக இவர்கள் வந்திருக்கின்றனர் என்பதை அறிய வேண்டும். 

அடுத்து ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்களின் சிறப்பினைக் கூறுவதாக பல அற்புத விஷயங்களை விளக்குகிறார் ஸ்ரீதாஸர்.

***

No comments:

Post a Comment