[பத்யம் #90] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #90]
முந்தி3வரு அனுப4விப மஹதா3
நந்த3 வைப4வ பேளலஸத3ள
ச2ந்த3தா3 க்ருபெயிந்த3 ஹ்ருத3யத3 மந்தி3ரவ மத்4யெ |
ஸுந்த3ராக்ருதி பி3ம்ப3த3ர்ஷன
தி3ந்த3 த்ருப்தரு திளிவுதி3வரு வ
ஸுந்த4ரெய மேலிர்து3 வர்தி1ப லக்ஷணக3ளிந்த3 ||90
(முந்தைய பத்யத்தில் பார்த்தவரை) முந்திவரு - அடுத்து இவர்; அனுபவிப மஹதானந்த - மிகப்பெரிய ஆனந்தத்தை (முக்தியை); வைபவ - அதன் சிறப்புகளை; பேளலஸதள - வர்ணிக்க முடியுமா? (முடியாது); சந்ததா - (பகவந்தனின்) அற்புதமான; க்ருபெயிந்த - அருளால்; ஹ்ருதயத மந்திரவ மத்யெ - இதயக் கோயிலின் நடுவில்; ஸுந்தராக்ருதி பிம்பதர்ஷனதிந்த - மிகவும் அழகான பிம்ப தரிசன மூர்த்தியினால்; த்ருப்தரு - மிகவும் திருப்தியுடன் காணப்படுபவார்கள்; வஸுந்தரெய - இந்த உலகில்; மேலிர்து வர்திப - இருந்து, இவர்கள் செய்யும் செயல்களால்; லக்ஷணகளிந்த - இவர்களின் லட்சணங்களிலிருந்து; திளிவுது - இது தெரிகிறது.
இத்தகைய பக்குவமடைந்த நிலையில் இருப்பவரின் லட்சணங்களை இந்த பத்யத்தில் விளக்குகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர்.
அடுத்து இந்த பக்குவமடைந்த ஸாதனா ஜீவி, அடுத்து அனுபவிக்க இருப்பதான முக்தியைப் பற்றி வர்ணிக்க முடியுமா? (முடியாது). பகவந்தனின் அற்புதமான அருளால், இதயக் கோயிலின் நடுவில் மிகவும் அழகான பிம்ப தரிசன மூர்த்தியினால் மிகவும் திருப்தியுடன் காணப்படுவார்கள். இந்த உலகிலிருந்து, இவர்கள் செய்யும் இத்தகைய செயல்களால், இவர்களுடைய லட்சணங்களிலிருந்து இது தெரிகிறது.
***
No comments:
Post a Comment