[பத்யம் #97] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #97]
ஏகமேவாத்3விதீயவெனிஸுத
ஏகரூபதி3 ஸகல ஜீவரொ
ளே3கவாக3தெ3 பி4ன்னனாகி3ருதிர்ப ஹரி எந்து3 |
ஏகசித்ததி3 சலிஸத3லெ அவ
லோகிஸுத ஸௌக்2யவனு ஸுரிவரு
லோகதொ3ளகே3காந்த ப4க்தரு ஸோகத3லெ தா1வு ||97
ஏகமேவாத்விதீய எனிஸுத - ஸ்ரீஹரி ஒருவனே பிரளய காலத்தில் இருந்தான் என்பதை புரிந்து கொண்டு; ஸகல ஜீவரொளகெ - அனைத்து ஜீவர்களிலும்; ஏகரூபதி - ஒரு ரூபத்தில் (பிம்ப மூர்த்தியாக); ஏகவாகதெ - அவர்களுடன் சேராமல்; பின்னனாகிருதிர்ப - வேறுபட்டு இருக்கிறான்; ஹரி - ஸ்ரீஹரி; எந்து - என்று; ஏகசித்ததி - ஒரு மனதுடன் (திடமாக); சலிஸதலெ - மனம் அலைபாயாமல் (குழப்பம் இல்லாமல்); அவலோகிஸுத - அனுசந்தானம் செய்தவாறு; ஸௌக்யவனு ஸுரிவரு - அனைவரிடமும் அன்பாக இருப்பார்கள்; ஏகாந்த பக்தரு - ஸ்ரீஹரியின் ஏகாந்த பக்தர் எனப்படுபவர்கள்; லோகதொளகெ - இந்த உலகத்தில்; தாவு - அவர்கள்; ஸோகதலெ - கர்வப்படாமல் இருப்பார்கள்.
ஒன்று என்னும் எண்ணின் சிறப்பினை விளக்கும்விதமாக இந்த பத்யத்தில் தத்வங்களை விளக்கியிருக்கிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர். ஏகாந்த பக்தர் என்றால் யார் என்பதன் விளக்கமும் இந்த பத்யத்தில் இருக்கிறது.
ஸ்ரீஹரி ஒருவனே பிரளய காலத்தில் இருந்தான் என்பதை புரிந்து கொண்டு, அவனே அனைத்து ஜீவர்களிலும் அவர்களின் பிம்பமூர்த்தியாக, அவர்களுடன் சேராமல் வேறுபட்டு இருக்கிறான் என்று ஒரு மனதுடன் திடமாக சிந்தித்தவாறு, அனைவரிடம் அன்பாக இருப்பார்கள். இவர்களே ஸ்ரீஹரியின் ஏகாந்த பக்தர் எனப்படுகிறார்கள். அவர்களிடம் கர்வம் இருக்காது.
ஒப்ப3 நாராயணனு லயத3ல்லிஹனு க3ட3
அப்3ஜஸம்ப4வனாக3 எல்லிஹனோ
அப்3ப3ரத3 ருத்3ர மத்திர்த3 தே3வர்க3ளு
ஒப்3ப3 ரிஷிக3ளு எல்லிஹரோ ||1
ஸ்ரீவாதிராஜர் தனது வைகுண்ட வர்ணனெ கிரந்தத்தில் இவ்வாறு கூறுகிறார். லயத்தில் (பிரளய காலத்தில்) ஸ்ரீமன் நாராயணன் ஒருவன் மட்டுமே இருந்தான். பிரம்மன், ருத்ரர், மற்ற தேவதைகள் என வேறு யாருமே அப்போது இருந்திருக்கவில்லை.
ஏகாந்த பக்தர்களின் லட்சணங்களை ஸ்ரீஜகன்னாததாஸர் ஹரிகதாம்ருதஸாரத்தில் விளக்கியிருக்கிறார். அதே பொருளையே இந்த பத்யத்தில் ஸ்ரீதாஸர் கூறியிருக்கிறார் என்பதை நாம் அறியலாம்.
கன்னடி3ய கைபிடி3து நோள்பன
கண்ணுக3ளு கண்ட3ல்லி எரக3தெ3
தன்ன ப்ரதிபி3ம்ப3வனெ காம்பு3வ த3ர்ப்பணவ பி3ட்டு |
த4ன்யரிளெயொளகெ3ல்ல கடெ3யலி
நின்ன ரூபவ நோடி3 ஸுகி2ஸுத
ஸன்னுதிஸுதானந்த3 வாரிதி4யொளகெ3 முளுகி3ஹரு ||(31-13)
கையில் கண்ணாடியைப் பிடித்து பார்த்தால், நம் கண்கள் கண்ட இடத்தில் பாயாமல், அதில் தெரியும் நம் பிரதிபிம்பத்தை மட்டுமே பார்க்கும். இப்படி சாதாரண மக்களான நாம், கண்ணாடியில் தெரியும் நம் பிரதிபிம்பத்தை பார்த்து மகிழ்கிறோம். ஆனால், உன் ஏகாந்த பக்தர்கள், கண்ணாடி இல்லாமலேயே, அனைத்து இடங்களிலும் வியாப்தனான, பிம்ப ரூபியான உன் ரூபத்தை, எங்கு வேண்டுமோ அங்கு பார்த்து, மகிழ்ச்சி அடைந்தவாறு, ஸ்தோத்திரம் செய்தவாறு, மகிழ்ச்சிக் கடலில் மூழ்குகின்றனர். ஆஹா, அவர்கள் எத்தகைய தன்யர்கள்!!.
***
No comments:
Post a Comment