[பத்யம் #102] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #102]
ஆரு ஸ்தா2னவ திளிது3 தனுவினொ
ளாரு ப3கெ3 கமலக3ள மத்4யதி3
ஆரு நாமதி3 பொளெவ ஹரி வ்யாபாரவனு க்3ரஹிஸி |
ஆரரொஶவாக3த3லெ ஜயிஸுத
ஆரு கர்மதி3 நிருதனாகி3ரு
தா1ரு ப்ராக்ருத ருசிய ப3யஸுவரு வீர வைஷ்ணவரு ||102
தனுவினொளு - இந்த தேகத்தில்; ஆரு ஸ்தானவ - மூலத்தில், நாபியில், ஹ்ருதயத்தில், இந்த்ரயோனியில், புருவ நடுவில், தலையில் - என ஆறு ஸ்தாங்களை அறிந்து; ஆறு பகெ கமலகள மத்யதி - 1). 4 தளங்களைக் கொண்ட முக்கோண தாமரை, 2). 6 தளங்களைக் கொண்ட அறுகோண தாமரை, 3). 8 தளங்களைக் கொண்ட 12 கோண தாமரை, 4). 2 தளங்களைக் கொண்ட வட்ட தாமரை; 5). 4 தளங்களைக் கொண்ட முக்கோண தாமரை, 6). 12 தளங்களைக் கொண்ட வட்ட தாமரை என உள்ள ஆறு தாமரைகளின் நடுவில்; ஆரு நாமதி பொளெவ - அனிருத்த, பிரத்யும்ன, சங்கர்ஷண (ப்ராதேஷ), வாஸுதேவ, நாராயண, வாஸுதேவ என்னும் ஆறு பெயர்களால் நிலைத்திருக்கும்; ஹரி வ்யாபாரவனு - ஸ்ரீஹரியின் செயல்களை; க்ரஹிஸி - புரிந்து கொண்டு; ஆரரொஷவாகதலெ - காம, க்ரோத,லோப, மோஹ, மத, மாத்ஸர்ய என்னும் அரிஷட் வர்க்கங்களுக்கு கட்டுப்படாமல்; ஜயிஸுத - வென்றவாறு; ஆரு கர்மதி - யஜன, யாஜன, அத்யயன, அத்யாபன, தான, ப்ரதிக்ரஹ என்னும் ஆறு கர்மங்களில்; நிருதனாகிருத - ஈடுபட்டவாறு; ஆரு ப்ராக்ருத ருசிய - அறுசுவைகளையும் (அனைத்தையும் சமமாக பாவிப்பார்கள் என்பது கருத்து); வீர வைஷ்ணவரு - உண்மையான வைஷ்ணவர்கள்.
உண்மையான வைஷ்ணவர்களின் செயல்களை இந்த பத்யத்தில் ஆறு என்னும் எண்ணினைக் கொண்டு அற்புதமாக விளக்கியிருக்கிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர்.
***
No comments:
Post a Comment