[பத்யம் #89] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #89]
ஈ வித4தி3 தல்லீனனாகு3த
தே3வ தே3வன ஹ்ருத3ய மத்4யதி3
பா4வதி3ந்த3லி கண்டு3 ஹர்ஷிபனன்னு பு4வியொளகெ3 |
பா4வி ஜீவன்முக்தனென்னுத
கோவித3ரு திளியுவரு ஆதனெ
கேவலதி3 ப3லிதி1ருவ ஸாத4னதா3யு கண்ட3வனு ||89
ஈ விததி - முந்தைய பத்யத்தில் கூறியவாறு; தல்லீனனாகுத - ஈடுபட்டு; தேவ தேவன - ஸ்ரீஹரியை; ஹ்ருதய மத்யதி - இதயத்தின் நடுவில்; பாவதிந்தலி கண்டு - மிகவும் அனுசந்தானத்துடன் கண்டு; ஹர்ஷிபனன்னு - மகிழ்பவனை; புவியொளகெ - இந்த உலகில்; பாவி ஜீவன்முக்தனு - எதிர்காலத்தில் முக்தி அடையப் போகிறவன்; என்னுத கோவிதரு திளியுவரு - என்று கற்றறிந்த அறிஞர்கள் அறிவார்கள்; ஆதனெ - அத்தகையவனே; கேலவதி பலிதிருவ - மிகவும் முதிர்ந்ததான (பக்குவமடைந்த); ஸாதனதாயு - ஸாதனை செய்வதற்கான ஆயுளை; கண்டவனு - பெற்றவன் ஆகிறான்;
இப்படியாக பகவந்தனைக் குறித்தான த்யானத்தில் ஈடுபட்டு, ஸ்ரீஹரியை தன் இதயத்தின் நடுவில் கண்டு மகிழ்பவனை, இந்த உலகில், ஜீவன் முக்தன் என்கின்றனர். அதாவது, எதிர்காலத்தில் முக்தி அடையப் போகிறவன் என்கிறார்கள். அத்தகையவனே, மிகவும் முதிர்ந்ததான (பக்குவமடைந்த) ஸாதனை செய்வதற்கான ஆயுளைப் பெற்றவன் ஆகிறான்.
குழந்தை, பாலக, வாலிப, மனிதன் என்னும் பல ஸாதனை ஆயுளின் நிலைகளைத் தாண்டி அடுத்த நிலையான பக்குவமடைந்த நிலையினைக் குறித்தே இந்த மேற்கண்ட இரு பத்யங்களில் ஸ்ரீதாஸர் விளக்கியிருக்கிறார்.
இத்தகைய நிலைகளில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை கண்டறிந்து, நம்மை அடுத்தடுத்த நிலைகளுக்கு முன்னேற்றி, ஸாதனைகளை செய்ய வேண்டும் என்பது ஸ்ரீதாஸர் சொல்ல வருவதான கருத்து என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
****
No comments:
Post a Comment