[பத்யம் #83] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #83]
அஸுவ த4ரிஸுத மனுஜ தே3ஹதி3
ஶ்வஸன மத லாஞ்சனவ ரக்ஷிஸி
பி3ஸஜனாப4கெ3 அதி4க ஸமரின்னில்லவெந்தெம்ப3 |
ஹஸனதீ3 ஸாமான்ய ஞானதி3
நிஶி ஹக3லு வஸுதெ4யலி களெவகெ3
முஸுகி1த3ரு வ்ருத்3தா4ப்ய அவனது3 ஶைஶவாவஸ்தெ2 ||83
அஸுவ தரிஸுத - இந்த வாழ்க்கையில்; மனுஜ தேஹதி - மனித தேகத்தில் இருந்து கொண்டு; ஷ்வஸன மத - வாயுதேவரின் மதத்தின்; லாஞ்சனவ - குறியீடுகளை (கோபிசந்தன, முத்திரைகளை); ரக்ஷிஸி - தரித்துக் கொண்டு; பிஸஜனாபகெ - ஸ்ரீபத்மனாபனுக்கு; அதிக ஸமரின்னில்ல - அதிகமோ, சமமானவரோ இல்லை; எந்தெம்ப - என்று சொல்லும்; ஹஸனத - சிறந்ததான - ஈ ஸாமான்ய ஞானதி - இத்தகைய சாமான்ய ஞானத்துடன்; நிஷி ஹகலு - இரவும் பகலும்; வஸுதெயலி - இந்த உலகில்; களெவகெ - காலத்தைக் கழிப்பவர்களுக்கு; அவனது - அவனுடைய; வ்ருத்தாப்ய - வயது (நிலை); ஷைஷவாவஸ்தெ - குழந்தை (மழலை) நிலை என்று; முஸுகிதரு - கூறினார்கள்.
இந்த வாழ்க்கையில், மனித தேகத்தில் இருந்துகொண்டு, வாயுதேவரின் மதத்தின் குறியீடுகளை (கோபிசந்தன முத்திரைகளை) தரித்துக் கொண்டு, ஸ்ரீபத்மனாபனுக்கு அதிகமோ, ஸமமானவரோ இல்லை என்று சொல்லும் சிறந்ததான இந்த சாமான்ய ஞானத்துடன், இரவும் பகலும், இந்த உலகில், காலத்தை கழிப்பவர்களுக்கு, அவனுடைய வயது / நிலை (ஸாதன சரீரத்தின் வயது), குழந்தை (மழலை) நிலை என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
கோபிசந்தன முத்திரைகளை தரித்து, ஹரி ஸர்வோத்தமா வாயு ஜீவோத்தமா என்று கூறிக்கொண்டு மட்டுமே இருப்பவர்கள், ஸாதனைக்கான படியில் குழந்தை நிலையில் இருக்கின்றனர் என்று ஸ்ரீதாஸர் கூறுகிறார்.
***
No comments:
Post a Comment