ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
497. ஸ்ரீ பூ4தமஹேஶ்வராய நம:
அஶ்வோத்தம ரத2கெ ஈஶ்வர ‘பூ4தமஹேஶ்வர’
நா ஸதா3 நமோ எம்பெ3 தே3ஹாக்ய ரதே2ஶ்வர ப்ராண
ஈ ஸுநாமதி3 நீ ஸ்ரீ ஹ்ரீ ஸமேத குளிதிருவி
ஹே ஸர்வபூ4த மஹேஶ்வரனே நமோ வாயுஸேவ்ய
மிகச் சிறந்த குதிரைகள் கொண்ட ரதத்தை கொண்டவனே. பூதமஹேஶ்வரனே உனக்கு என் நமஸ்காரங்கள். தேகம் என்னும் இந்த
ரதத்தில், லட்சுமிதேவி சகிதமான ப்ராண என்னும் பெயரில் நீ அமர்ந்திருக்கிறாய். ஸர்வபூத
மஹேஶ்வரனே. வாயுதேவரால் வணங்கப்படுபவனே.
498. ஸ்ரீ ஆதி3தே3வாய நம:
ப்ராத2மிகவாகி3 ஸோமபான மாள்ப ‘ஆதி3தே3வ’
ஸதா3 நமோ யக்ஞபூஜா ஸேவா நைவேத்3யக3ளன்ன
மொத3லு அர்ப்பிஸல்பட்டு ஸ்வீகரிஸுவி ராஜஸூ
யாதி3 மொத3ல பூஜெய கொண்ட3த்3து3 லோகப்ரஸித்3த3
முதன்முதலில் அமிர்தத்தை படைத்தவனே. ஆதிதேவனே. உனக்கு
என் நமஸ்காரங்கள். யக்ஞங்கள், பூஜைகள், ஸேவைகள், நைவேத்ய அன்ன, ஆகியவை அர்ப்பிக்கப்பட்டு
அதனை நீ ஏற்றுக் கொள்கிறாய். ராஜஸூயாதி யாகங்களை நீ ஏற்றுக் கொண்டது, உலகப் புகழ்பெற்ற
செய்தியாக இருக்கிறது.
499. ஸ்ரீ மஹாதே3வாய நம:
ப3ஹுகர்மகர்த ‘மஹாதே3வ’ நமோ நமோ எம்பெ3
மஹதா3தி3 ஸர்வபூ4த ஸ்ருஷ்டி மொத3லாத3 கர்ம
மஹானந்த3 லீலெயா ஸ்வதந்த்ரதி3 மாடு3வி நீனு
மஹி ஸ்ரீஶ ஸர்வமுக்தாமுக்த நியந்த்ரு ஸர்வேஶ
பற்பல செயல்களை செய்பவனே. மஹாதேவனே. உனக்கு என் நமஸ்காரங்கள்.
மஹதாதி அனைத்து தத்வங்களை படைத்தவனே. இந்த செயல்களை உன் லீலையினால், ஸ்வதந்த்ரமாக செய்பவனே.
லட்சுமிதேவியின் தலைவனே. அனைத்து முக்தர்கள், அமுக்தர்களுக்கும் நியமனம் செய்பவனே.
ஸர்வேஶனே.
500. ஸ்ரீ தே3வேஶாய நம:
ஶத்ருக3ள ஸோலிஸுவ இச்செயுள்ளவனு நீனு
ஸ்தோத்ர ஸ்வாமியு ‘தே3வேஶ’ நமோ எம்பெ3 சதுராத்ம
ஒந்தொ3ந்து3 அக்ஷரதொ3ளிஹவு கு3ணக்ரியாரூப
ஹே தே3வதெக3ள ஈஶனே ஶரனு ஶரணெம்பெ3
எதிரிகளை வெல்லும் விருப்பம் கொண்டவன் நீ. ஸ்தோத்திரம்
செய்யப்படுபவனே. தேவேஶனே. உனக்கு என் நமஸ்காரங்கள்.
அனைத்து அக்ஷரங்களிலும் நீ இருக்கிறாய். குண, க்ரியா ரூபனாக இருப்பவனே. தேவதைகளின்
ஈஶனே. உன்னை நான் வணங்குகிறேன்.
***