Saturday, May 13, 2023

#163 - 476-477-478 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

476. ஸ்ரீ ஸ்வவஶாய நம:

ஸ்வதந்த்ரனுஸ்வவநமோ அனன்யாதீ3 நீனு

ஸதா3 ஸ்வேச்சா ப்ரவ்ருத்தனு ஸர்வவன்னு நின்ன

அதீ3னவாகி3ட்டு கொண்டி3ருவ ஸ்வாமித்வதி3ந்த3 ஸ்வ

உத்தமத்வ ஸுக2ரூபத்வ ஹீகெ3 ஸ்வவ 

ஸ்வதந்த்ரனே. ஸ்வவனே. உனக்கு என் நமஸ்காரங்கள். யாருக்கும் நீ அதீனம் இல்லை. எவ்வித பலனும் இன்றி அனைத்து செயல்களையும் செய்பவன். அனைத்தையும் உன் வசமே / அதீனமே வைத்துக் கொண்டிருப்பவனே. ஸர்வோத்தமனே. ஸுகரூபனே. 

477. ஸ்ரீ வ்யாபினே நம:

நானா ரூபவந்த பூர்ணைஶ்வர்யவ்யாபீநமோ எம்பெ3

ஆனந்த3ரூபனு நீனு நின்ன ஶக்தியிந்த3

அனந்த ஜீவரொளு ஸர்வவஸ்துக3ளொளித்3து3

நீனு தத்ஸத்தா ஶக்தி ப்ரவ்ருத்யாதி33ளன்னீவி 

பற்பல ரூபங்களை கொண்டவனே. முழுமையான செல்வங்களை கொண்டவனே. வ்யாபினே உனக்கு என் நமஸ்காரங்கள். ஆனந்தரூபனே. உன்னுடைய இந்த சக்தியினால் நீ அனைத்து ஜீவர்களிலும், அனைத்து பொருட்களிலும் இருந்து, அந்தந்த ஜீவர்களுக்கும் / பொருட்களுக்கும், சக்தியினை கொடுக்கிறாய். 

478. ஸ்ரீ நைகாத்மனே நம:

ப்ரத்யுபகார மாடு3வரு இல்லவந்த2நைகாத்ம

ஸதா3 நமோ ஸம்பூர்ணைஶ்வர்ய ஆனந்தா3தி3 ஸ்வரூப

ஆப்தகாமா ஸ்வப்ரயோஜன விவர்ஜித அனந்த

அத்பு4தமஹிமனு ஸ்வரத ஸ்வதந்த்ர ஸ்ரீரமண 

எதையும் பிரதிபலன் பார்க்காமல் உதவி செய்பவனே. நைகாத்மனே. உனக்கு என் நமஸ்காரங்கள். முழுமையான ஐஸ்வர்யங்களை ஆனந்தாதி ஸ்வரூபத்தினை கொண்டவனே. ஆப்தகாமனே. உன் செயல்களால் உனக்கு எவ்வித பிரயோஜனங்களும் இல்லை. அனந்தமான, அற்புதமான மகிமைகளை கொண்டவன். ஸ்வதந்த்ரனே. ஸ்ரீரமணனே.

***


No comments:

Post a Comment