ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
494. ஸ்ரீ க3ப3ஸ்தி2நேமியே நம:
ஸுக2ப்ராப்தி மாடு3வவ ‘க3ப3ஸ்தி2நேமியே’ நமோ
ஸுக2ஞான ஹிதகர தேஜ:ப்ரவர்த்தக நீனு
ப்ரகாஶிஸுவ தேஜ:புஞ்ச சக்ர ஹிடிதி3ருவி
ஆர்கேந்து பா4ஸகனு ஆஶ்ரயனு ஜ்யோதிர்மயனு
ஸுக ப்ராப்தியை கொடுப்பவனே. கபஸ்திநேமியே உனக்கு என்
நமஸ்காரங்கள். சுகத்தை, ஞானத்தை, தேஜஸ்ஸினை கொடுப்பவன் நீ. ஒளிர்வதான தேஜஸ் கொண்ட சக்கரத்தை
பிடித்திருப்பவன் நீ. சந்திர, சூரிய, நட்சத்திரங்களுக்கு நீயே ஒளியை கொடுக்கிறாய்.
ஜோதிர்மயனே.
495. ஸ்ரீ ஸத்வஸ்தாய நம:
ப4க்தர மனஸலி இருவவனு ‘ஸத்வஸ்த2னே’
ஸதா3 நமோ ப4க்திவர்த்திஸி ராஜிஸுவி ஹ்ருஜ்யோதி
நிர்தோ3ஷ கல்யாண கு3ண நிதி4யே நிகூட4னாகி3
ஸதா3 அந்தர்யாமியாகி3ருதியோ நீ ஸ்ரீஸமேத
பக்தர்களின் மனதில் இருப்பவனே. ஸத்வஸ்தனே. உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்களில் பக்தியை வளர்த்து அங்கு நீ இருப்பாய். நிர்தோஷனே. கல்யாண குணநிதியே. ஸ்ரீலட்சுமிதேவி சமேதனாக நீ எப்போதும் அனைவரிலும் அந்தர்யாமியாக இருக்கிறாய்.
496. ஸ்ரீ ஸிம்ஹாய நம:
ரத2ஸங்க3தவாத3 அனேக அஶ்வவந்த ‘ஸிம்ஹ’
ஸதா3 நமோ நமோ நினகெ3 ஹ்ருஷிகேஶ ஸர்வேஶ
மாத4வனே நீ ஸ்ரேஷ்ட நினகெ3 ஸம ஸ்ரேஷ்டரில்ல
மோத3மய ஸாராத்மா நிர்தோ3ஷ கு3ணபூர்ண ஸிம்ஹ
பற்பல குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தை கொண்டவனே. ஸிம்ஹனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஹ்ருஷிகேஶனே. ஸர்வேஶனே. மாதவனே. நீயே சிறந்தவன். உனக்கு சமமோ, சிறந்தவரோ வேறு யாரும் இல்லை. ஆனந்தமயனே. ஸாராத்மனே. நிர்தோஷனே. குண பூர்ணனே. ஸிம்ஹனே.
***
No comments:
Post a Comment