Wednesday, May 17, 2023

#167 - 488-489-490 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

488. ஸ்ரீ ஸத3ஸக்ஷராய நம:

யக்ஞஷாலாத3ல்லித்த3 ஸோம முத3தி3ந்த ஸ்வீகாரா

யக்ஞபு4க் நீ மாள்பி ஸத3ஸக்ஷர நமோ நமோ நினகெ3

ஸர்வக்3 நீ மூர்தா1மூர்த்தக3 ஸ்ருஷ்டிஸ்தி2திலய

முக்2யகாரணனு ஸத3ஸக்ஷர எந்தெ3னிஸுவி 

யக்ஞசாலையிலிருந்து உன்னுடைய பங்கினை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்பவனே. யக்ஞங்களை நீயே செய்விக்கிறாய். ஸதஸக்‌ஷரனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸர்வக்ஞனே. உருவம் / அருவம் என அனைத்தையும் நீயே படைத்தாய். நீயே அனைத்திற்கும் முக்கிய காரணன். ஆகையால் ஸதஸக்‌ஷர எனப்படுகிறாய். 

489. ஸ்ரீ அக்ஷராய நம:

4க்தக்ருதஸ்தோத்ர அங்கீ3கரிஸுவவஅக்ஷரம்

ஸதா3 நமோ என்ன ஹொரஒளகித்3து3 மாடி3ஸுவ

ஸ்தோத்ரக்3ரந்தக3 நீ 3யதி3ந்த3 அங்கீ3கரிஸோ

ஸதா33 ப்ரதிபாத்3 நித்ய நிர்தோ3 ஸுகு3 

பக்தர்கள் செய்யும் ஸ்தோத்திரத்தை அங்கீகரிக்கும் அக்‌ஷரனே உனக்கு என் நமஸ்காரங்கள். எனக்கு உள்ளே / வெளியே என இருந்து நீ செய்விக்கும் இந்த ஸ்தோத்திர கிரந்தங்களை அங்கீகரிப்பாயாக. வேதங்களால் போற்றப்படுபவனே. நிர்தோஷனே. ஸுகுணனே.

 490. ஸ்ரீ அவிக்ஞாதே நம:

அக்3னிகோ3க்ஷீராதி3யிம் ஸுஶோபி4 ஸோமரஸவ

நிக்3ரஹிஸுவிஅவிக்ஞாதாநமோ நமோ நினகெ3

நீ 3ணனெ மாட3லாரி ப்ரஸன்ன 4க்தரபரா

43 க்ருபதி3 கொம்பி3 ஸுபவித்ர பூஜா த்3ரவ்ய 

அக்னி, கோக்‌ஷீர ஆகியற்றால் ஒளிர்வதான ஸோம-ரஸத்தை நீ புறக்கணிக்கிறாய். அவிக்ஞாதனே உனக்கு என் நமஸ்காரங்கள். உன் பிரியமான பக்தர்களின் தவறுகளை நீ மன்னிக்கிறாய். அவர்கள் அளிக்கும் பவித்ரமான பூஜா திரவியங்களை நீ ஏற்றுக் கொள்கிறாய். 

***

No comments:

Post a Comment