Tuesday, May 9, 2023

#159 - 464-465-466 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

464. ஸ்ரீ உத்தமாய நம:

உத்க்ருஷ்டஸ்ரேயஸ்ஸு ஒத3கி3ஸி கொடு3வந்தவனு

உத்தமம்நமோ நமோ நமோ எம்பெ3 ஸ்ரீ ஸ்ரீனிவாஸ

4க்தரிகெ3 இஹபரத3ல்லி ஸுக2வொத3கி3ஸி

முக்தரிகெ3 நீ அதிஶயானந்த3 ஒத3கி3ஸுவி 

மிகச்சிறந்த புகழினை அருள்பவனே. உத்தமனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீனிவாஸனே, உன் பக்தர்களுக்கு இஹ பரங்களில் சுகத்தை அருள்பவனே. முக்தர்களுக்கு நீ மிகச்சிறந்த ஆனந்தத்தை அருள்கிறாய். 

465. ஸ்ரீ ஸுவ்ரதாய நம:

யாவதோ3ஷவு இல்லத3 ஸுந்த3 ஶுப4கர்மக3ள்

ஸுவ்ரதநீ மாடு3வி நமோ எம்பெ3 ஸதா3 நினகெ3

தி3வ்யஶோப4னவு ஜக3த் ஸம்ரக்ஷணாதி3 கர்மவு

வ்ரதவு தத் கர்தா ஸுவ்ரத ஶோப4னகர்த நீனு 

நீ செய்யும் செயல்களில் எவ்வித தோஷங்களும் இருப்பதில்லை. ஸுவ்ரதனே. உனக்கு என் நமஸ்காரங்கள். உலகத்தை காப்பதான செயல்களை நீ செய்கிறாய். அதுவே உன் விரதம். அனைத்து மங்களங்களையும் அருள்பவனே. 

466. ஸ்ரீ ஸுமுகா2 நம:

ஒள்ளே குது3ரெயு மொத3லாத3 யோக்3 போக்3யவஸ்து

3ளன்னு தாராளவகி3 கொடு3ஸுமுக2நமோ

கலங்கவில்லத3 ஸுந்த3ரதம முக2லாவண்ய

மாலோல நீ 4க்தரலி க்ருபாத்3ருஷ்டி பீ3ருவெயோ 

குதிரை முதலான யோக்ய வஸ்துகளை தாராளமாக அருள்பவனே. ஸுமுகனே. உனக்கு என் நமஸ்காரங்கள். களங்கம் இல்லாத அழகான முகத்தை கொண்டவனே. ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. பக்தர்களில் உன்னுடைய கருணைப் பார்வையை வீசுவாயாக.

***


No comments:

Post a Comment