Monday, May 1, 2023

#152 - 443-444-445 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

 443. ஸ்ரீ மஹாபோ4கா3 நம:

விபுல ஆனந்த3மய ஸ்வரூப நீ ஸோமபான

தி3ம் புட்டுவ மஹாஸுக2போ43 லீலானுப4விப

ஸ்ரீபதேமஹாஸுக2போ33நாம்னனே நமோ எம்பெ3

ஸுபூர்ணானந்த3த்வதி3ந்த3 மஹாபோ43னு நீனேவெ 

எப்போதும் ஆனந்தமய ஸ்வரூபனாக இருப்பவனே. ஸோமபானத்தினால் பிறக்கும் மஹா சுகபோகத்தினை அருள்பவனே. அனைத்தையும் உன் லீலைகளால் அனுபவிப்பவனே. ஸ்ரீபதியே. மஹாஸுகபோக என்னும் பெயர் கொண்டவனே உனக்கு என் நமஸ்காரங்கள். பூர்ணானந்தத்தைக் கொண்டிருப்பதால் - மஹாபோகன் நீயே ஆகிறாய். 

444. ஸ்ரீ மஹாத4னாய நம:

உரு உதா3 4னதா3தாமஹாத4நமஸ்தே

வர 4க்தரிகெ3 தெ3ய்வி ஸம்பத்ப்ரதா3தனு புண்ய

ஜாரிகெ3 ஶு புத்ர தா3ரா தா4ன்ய த்3ரவ்யாதி33

ஹரி ப்ரீதி ஸாத4னோபியோக3 4னவன்ன ஈவி 

மிகச் சிறந்த கருணாமயி, செல்வங்களை அளிப்பவனே. மஹாதனனே உனக்கு என் நமஸ்காரங்கள். உன்னுடைய பக்தர்களுக்கு அற்புத செல்வங்களை வழங்குபவனே. புண்யவந்தர்களுக்கு, பசு, புத்திரர்களை வழங்குபவனே. தானிய, திரவ்யாதிகளை ஹரி ப்ரீதிக்கான ஸாதனங்கள் என்று நினைத்து பயன்படுத்துபவர்களுக்கு செல்வங்களை அளிப்பவனே. 

445. ஸ்ரீ அனிர்விண்ணாய நம:

தோ3ஷோஜ்யுத ஸதா3 நீ தோ3ஷக3ந்த4லேஶவு இல்ல

ஈஷத3பி ந்யூனதெ இல்லத3 ஸர்வாங்க3 ஸுந்த3

புஷ்கல சின்மய ஸாக்ஷாத் மன்மத2 மன்மத2: நீனு

அஷோக ஷுக்ரஅனிர்விண்ணபூர்ணானந்த3 நமஸ்தே 

தோஷங்கள் அற்றவனே. உனக்கு தோஷங்கள் சிறிதும் இல்லை. சிறிதும் குறைவு அற்றவனே. ஸர்வாங்கனே. ஸுந்தரனே. அபாரமானவனே. சின்மயனே. மன்மதனைவிட மன்மதன் நீயே. சோகங்கள் அற்றவனே. அனிர்விண்ணனே. பூர்ணானந்தமயனே. உனக்கு என் நமஸ்காரங்கள்.

***


No comments:

Post a Comment