ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
458. ஸ்ரீ ஸத்ராய நம:
பூர்ணாயுஷ்யவ ஒத3கி3ஸி ஈவ ‘ஸத்ராம்’ நமோ
ஹனும மார்க்கண்டே3ய ப3லி விபீ4ஷணாஷ்வத்தா2ம
இன்னு ப3ஹு மஹாத்மரிகெ3 சிரமாயுஷ்யவித்தி
நின்ன ப4க்தர்கெ3 ஆயுஷ்யவ்ருத்3தி4 மாள்பி கருணாளோ
முழுமையான ஆயுளை அருள்பவனே. ஸத்ராயா. உனக்கு என் நமஸ்காரங்கள்.
ஹனும, மார்க்கண்டேய, பலி, விபீஷண, அஷ்வத்தாம என இன்னும் பல மஹாத்மர்களை சிரஞ்சீவி ஆக்கியவனே.
உன் பக்தர்களுக்கும் அவர்களின் ஆயுளை அதிகரிப்பாயாக. கருணாமூர்த்தியே.
459. ஸ்ரீ ஸதாங்க3தயே நம:
ஸாது4 ஸஜ்ஜனரிகெ3 தா3ன கொடுவுத3ரல்லி நீ
பு3த்3தி4வுள்ளவ ‘ஸதாங்க3தி’ நமோ நமோ நினகெ3
ஹே த3யாநிதே4 மாத4வனே நீ ஞானிப4க்த ப்ராப்ய
ஸதா3க3ம ஹொக3ளுத்தெ ஸூரிப்ராப்ய ஸூர்யனெந்து3
ஸாது ஸஜ்ஜனர்களுக்கு தானம் கொடுப்பதில் (அருள்வதில்)
நீ அறிவாளி. ஸதாங்கனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஹே கருணைக்கடலே. மாதவனே. நீ ஞானிகளால்,
பக்தர்களால் அறியப்படுபவன். ஞானிகளால் அறியப்படும் சூரியன் நீ என்று வேதங்கள் உன்னை
போற்றுகின்றன.
460. ஸ்ரீ ஸர்வத3ர்ஶினே நம:
ப4க்தருக3ளிகெ3 தா3னகொடு3வத3க்கோஸ்கர நீ
ஸர்வத்3ரவ்ய இட்டுகொண்டி3ருவி ‘ஸர்வத3ர்ஶி’ நமோ
இந்து3 ரவி ஶங்க2நிதி4 பத்3மநிதி4 த்3ரவ்யத4ன
ப்ரத3 கைக3ளுள்ளவ ஸ்ரீ ஹ்ரீ யுக் ஸ்ரீகர விபஸ்த2
பக்தர்களுக்கு அருள்வதற்காகவே, நீ அனைத்து த்ரவ்யங்களையும்
உன்னிடம் வைத்துக் கொண்டிருக்கிறாய். ஸர்வதர்ஶியே.
உனக்கு என் நமஸ்காரங்கள். சூரிய சந்திரனே. சங்கு, பத்ம, த்ரவ்ய, செல்வம் ஆகியவற்றை
அருளும் கைகளைக் கொண்டவனே. ஸ்ரீகரனே.
***
No comments:
Post a Comment