ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
473. ஸ்ரீ வீரபா3ஹவே நம:
அதி உத்தம வேத3 அபி4மந்த்ரித ஸோமரஸ
ஹிததி3 ஸ்வீகரிஸுவ ‘வீரபா3ஹு’ நமோ எம்பெ3
க்ஷத்ரியோத்தம ராஜருக3ளந்தஸ்த2னாகி3 நீனு
க்ஷிதிய பாலிஸுவி ராஜராஜேஷ்வரனே ஸ்வராட்
மிகச் சிறந்ததான, வேதங்களால் அபிமந்த்ரணம் செய்யப்பட்ட, ஸோமரஸத்தினை அன்புடன் ஏற்றுக் கொள்பவனே. வீரபாஹுவே. உனக்கு என் நமஸ்காரங்கள். க்ஷத்ரியர்களில் உத்தமரான அரசர்களில் அந்தர்யாமியாக இருந்து நீ உலகத்தை காக்கிறாய். ராஜராஜேஷ்வரனே. விஸ்வரூபனே.
474. ஸ்ரீ விதா3ரணாய நம:
அஹிம்ஸ்யனு ‘விதா3ரண’ நமோ எம்பெ3 ப3லபூர்ண
மஹானந்த3ப்ரசுர நீ மஹிஷீயரிகு3 கோ3பீ
மஹாப4க்த ஞானிஸமூஹக்கெ ‘ணம்’ ஸுக2ப்ரதா3தா
மஹாதை3த்ய ஹிரண்யகஶிபுன ஸீள்தி3 ந்ருஹரே
அஹிம்ஸ்யனே. விதாரணனே உனக்கு என் நமஸ்காரங்கள். பலபூர்ணனே. ஆனந்தமயனே. உன் மனைவிகளுக்கும், மஹா பக்தர்களான கோபிகை முதலான பக்தர்களுக்கும் சுகத்தை கொடுப்பவனே. மஹா தைத்யனான ஹிரண்யகசிபுவை கொன்றவனான ஸ்ரீநரசிம்மனே.
475. ஸ்ரீ ஸ்தா2பனாய நம:
ப4க்தரிகெ3 ஸுக2வொத3கி3ஸுவ ‘ஸ்தா2பன’ நமோ
ப4க்தரிகெ3 ஆனந்த3 நித்3ரா ப்ரவர்த்தகனு நீனு
அதி உத்தமானந்த3மய ஸ்வப4க்தரிகெ3 ஸுக2
தா3தா ஸுபாலக ஆப ஸர்வவந்த்3ய ஸ்வாமி நீனு
பக்தர்களுக்கு சுகத்தை கொடுக்கும் ஸ்தாபனனே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்களுக்கு ஆனந்த நித்ரையை அருள்பவனே. தன் பக்தர்களுக்கு உத்தமமான ஆனந்தமய சுகத்தை (மோட்சத்தை) அருள்பவனே. அனைவரையும் காப்பவனே. அனைவராலும் வணங்கப்படுபவனே. ஸ்வாமியே.
***
No comments:
Post a Comment