ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
467. ஸ்ரீ ஸூக்ஷ்மாய நம:
உத்க்ருஷ்ட வேகா3தி3 மங்க3ள லக்ஷணவுள்ள ஒள்ளே
ஜாதி குது3ரெ ஒடெ3யனெ ‘ஸூக்ஷ்மனே’ நமோ எம்பெ3
குது3ரெக3ளல்லி நால்கு ஜாதி ஹய வாஜி ஆர்வ
சதுர்த்த2 அஶ்வவு அஶ்வக்கெ அதிஶயவேக3
மிகவும் வேகம் கொண்ட, நல்ல லட்சணங்களைக் கொண்ட, குதிரைகளை கொண்டவனே. ஸூக்ஷ்மனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஹய, வாஜி, ஆர்வ மற்றும் அஶ்வ. இதில் அஶ்வ என்பது அதிசமான வேகத்தை கொண்டதாகும்.
468. ஸ்ரீ ஸுகோ4ஷாய நம:
காம்யயக்ஞ ஸோமரஸவுள்ளவ ‘ஸுகோ4ஷ’ நமோ
காமரஹித பூஜெயக்ஞ ஸ்தோத்ராதி3 அர்ப்பிதவ
ப்ரேமதி3ந்த3 ஸ்வீகரிஸுவி ஸகாமதி3 அர்ப்பித
ஸோமரஸவ ப்ரீதி இல்லதெ3 நீனு இட்டுகொம்பி
ஸோமரஸத்தை கொண்டவனே. ஸுகோஷனே உனக்கு என் நமஸ்காரங்கள். எவ்வித விருப்பமும் இல்லாமல் செய்யப்படும் பூஜை, யக்ஞ, ஸ்தோத்திரங்களை அன்புடன் ஏற்றுக் கொள்பவனே. பிரதிபலனை எதிர்ப்பார்த்து செய்யப்படும் செயல்களை நீ அன்பு இல்லாமல் ஏற்றுக் கொள்கிறாய்.
469. ஸ்ரீ ஸுஹ்ருதா3ய நம:
ஸுக2பூர்ண ஹ்ருத3யவுள்ள ‘ஸுஹ்ருத3’ நமோ எம்பெ3
ஸுக2ஸாத4ன வேதா3தி3க3ள கோ4ஷ மாள்ப ப4க்த
ஸுக2ப்ரத3 உதா3ரமனஸ்ஸுள்ள ஸுஹ்ருத3 நீனு
ஸுபூர்ண ஸுக2ரூப நிர்தோ3ஷனு ஸு2கப்ரதா3த
சுகமயமான இதயத்தைக் கொண்டவனே. ஸுஹ்ருதயனே உனக்கு என் நமஸ்காரங்கள். மோட்சத்திற்கான சாதனான வேதங்களை சொல்லும் பக்தர்களுக்கு, மோட்சத்தை அருளும் கருணை உள்ளம் கொண்டவன் நீ. பூர்ணனே. ஸுக ரூபனே. நிர்தோஷனே. சுகத்தை கொடுப்பவனே.
***
No comments:
Post a Comment