Wednesday, May 3, 2023

#153 - 446-447-448 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

446. ஸ்ரீ ஸ்த2விஷ்டாய நம:

உத்தமோத்தமகு3த்தமனிகெ3 உத்தமனு ஸர்வே

அதிஸ்தூ2 அப்ராக்ருதஸ்த2விஷ்டனேநமோ எம்பெ3

சதுர்த3 பு4வன அந்தர்ப3ஹிர்வ்யாப்த ஶனே

வந்தே3 ஸ்ரீகூர்ம ஸ்ரீவிஷ்ணு ஸ்ரீஶிம்ஶுமார புருஷ 

ஸர்வோத்தமனே. ஸர்வேனே. திடமானவனே. அப்ராக்ருதமானே. ஸ்தவிஷ்டனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஈரேழு பதினான்கு உலகங்களிலும், உள்ளும் வெளியுமாக அனைத்து இடங்களிலும் வ்யாப்தனே. ஈனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீகூர்மனே, ஸ்ரீவிஷ்ணுவே. ஸ்ரீஶிம்ஶுமாரனே புருஷனே. 

447. ஸ்ரீ பு4வே நம:

ஸ்ரீ மனோஹர பரம ஏக ஸ்வதந்த்ரனு நீ

அமல உரு ஸச்சக்தி ஸத்தாவந்தபூ4:’ நமஸ்தே

ஸ்ரீ மத்து பி3ரம்மஶிவாதி3 ஸர்வரு நின்னாதீ4னரு

கூர்ம விஷ்ணு ஶிம்ஶுமார ஸர்வாதா4 ஶாஶ்வத்பூர்ண 

ஸ்ரீமனோஹரனே. ஸர்வோத்தமனே. ஸ்வதந்த்ரனே. அபாரமான சிறந்த சக்தியை கொண்டவனே. புவே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீலட்சுமிதேவி, பிரம்ம, சிவன் ஆகிய அனைவரும் உன்னுடைய அதீனர்களே ஆவர். கூர்மனே. விஷ்ணுவே. ஶிம்ஶுமாரனே. அனைவருக்கும் / அனைத்திற்கும் ஆதாரகனே. நிரந்தரமான. பூர்ணனே. 

448. ஸ்ரீ 4ர்மயூபாய நம:

ஸோம ஸம்ஸர்க்க3தி3ம் ஸ்வீகரிஸி பானமாள்பி யோக3

க்ஷேமாதி3 ஸம்ரக்ஷணெ மாள்ப4ர்மயூபநமஸ்தே

4ர்மஸ்தா2பக தா4ரக 4க்தமனத3ல்லி நிந்து

4ர்மஸாத4 கெ3யிஸி யக்ஞபூஜெ கொம்பெ3 2லதா3 

ஸோம ரஸத்தினை ஏற்றுக் கொள்பவனே. பக்தர்களின் நலன்களை காப்பவனே. தர்மயூபனே. உனக்கு என் நமஸ்காரங்கள். தர்மத்தை நிறுவுபவனே. அனைவருக்கும் ஆதாரகனே. பக்தர்களின் மனதில் நின்று, தர்ம ஸாதனைகளை செய்வித்து, யக்ஞங்கள், பூஜைகள் ஆகியவற்றை செய்து கொண்டு, தக்க பலன்களை கொடுப்பவனே.

****

No comments:

Post a Comment