ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
482. ஸ்ரீ வத்ஸினே நம:
ஸுதா1தி3 பரிவாரவந்தனு ‘வத்ஸீ’ நமோ எம்பெ3
பத்மப4வ வாயு ஶிவ ப்ரத்3யும்னாதி3 ஸுத2 ஸேவ்ய
வத்ஸி எந்தெ3னிஸுவி ஸ்ரீவத்ஸத4ரனாது3த3ரிம்
வத்ஸக3ளன்ன ஸதா3 ஸம்ரக்ஷிஸுதி கோ3பால
மகன் ஆகியோர்களைக் கொண்ட பரிவாரத்தை கொண்டவனே. வத்ஸினே
உனக்கு என் நமஸ்காரங்கள். பிரம்மா, வாயு, ருத்ரர், பிரத்யும்னன் முதலான மகன்களால் வணங்கப்படுபவனே.
வத்ஸி எனப்படுபவனே. ஸ்ரீவத்ஸதரன் ஆகையால், பசுக்களை எப்போதும் காப்பவனே. கோபாலனே.
483. ஸ்ரீ ரத்னக3ர்ப்பா4ய நம:
ப4க்தரிகெ3 இச்சிதவ ஈவ மனஸ்ஸுள்ளவனு
‘ரத்னக3ர்ப்ப4னே’ நமோ ஸ்ரீகர நாராயண ஹ்ரீ ஸ்ரீ
யுக்த நீ க3ருடோ3பரி குளிது கைக3ளிம் சாசி
ரத்ன த4னத்3ரவ்ய கொடு3வி ப4க்தரிகெ3 க்ருபெயிம்
பக்தர்கள் விரும்புவதை அளிக்கும் மனம் கொண்டவனே. ரத்னகர்ப்பனே.
உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீகர நாராயணனே. நீ கருடனில் அமர்ந்து, உன் திருக்கரங்களால்
ரத்ன, செல்வங்களை உன் பக்தர்களுக்கு கருணையுடன் அருள்கிறாய்.
484. ஸ்ரீ த4னேஷ்வராய நம:
த4னாதி3பதியாகி3 க்ருத்ஸாதி3 ரிஷிக3ள மாள்பி
த4னேஶ்வர நமோ த4னநியாமக த4ன ஸ்வாமி
த4னாதி3க3ள நீ நிர்வ்யாஜ ப4க்தரிகெ3 தே3வஶர்ம
ஞானிரைக்வ ஸுதா4மாதி3க3ளிகி3த்தி நீனாகி3யே
க்ருத்ஸ முதலான ரிஷிகளை தனாதிபதியாக ஆக்கினாய். தனேஶ்வரனே உனக்கு என் நமஸ்காரங்கள். செல்வங்களை நியமனம்
செய்பவனே. நிர்வ்யாஜ பக்தர்களுக்கு செல்வங்களை அளிப்பவனே. தேவஶர்மா, சுதாமா ஆகிய பக்தர்களுக்கு நீ அருளினாய்.
***
No comments:
Post a Comment