Saturday, May 6, 2023

#156 - 455-456-457 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

455. ஸ்ரீ யக்ஞ இஜ்யாய நம:

யக்3ஞத3லி பூஜ்ய நீனுயக்3 இஜ்யநமோ எம்பெ3

யக்3ஞபோ4க்தா ஆது33ரிம் யக்3 நீனு யக்3ஞத3லி

பூஜ்யனாது33ரிம் இஜ்ய நீனு யஜனீய

யக்3ஞகர்தா யக்3ஞகாரக நின்ன ப்ரீதிகெ3 யக்3 

யக்ஞத்தில் நீயே பூஜ்யனாக இருக்கிறாய். யக்ஞ இஜ்யனே உனக்கு என் நமஸ்காரங்கள். யக்ஞத்தை ஏற்றுக் கொள்பவனே. ஆகையாலேயே, யக்ஞ இஜ்ய என்று அழைக்கப்படுகிறாய். யக்ஞத்தை செய்விப்பவன். யக்ஞத்தை செய்பவன். உன் ப்ரீதிக்காகவே யக்ஞங்கள் செய்யப்படுகின்றன. 

456. ஸ்ரீ மஹேஜ்யாய நம:

4க்தரனு மஹாபராதி4யாத3ரு காபாடு3

மத்து அபராதி4 அப4க்தரன்னு நீ த்யஜிஸுவி

4க்தேஷ்டமஹேஜ்யநமோ ஸ்ரீ மத்து பி3ரம்மாதி3 பூஜ்ய

பூ4தே3வி ஸ்ரீதே3வி ஸமேத நாராயண வராஹ 

பக்தர்கள், அவர்கள் தவறுகளை செய்தாலும் காப்பாற்றுபவனே / அருள்பவனே. பக்தர்கள் அல்லாதவர்களின் தவறுகளை தண்டிப்பவனே. மஹேஜ்யனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீலட்சுமிதேவி, பிரம்மா முதலானவர்களால் வணங்கப்படுபவனே. ஸ்ரீதேவி, பூதேவி சமேத நாராயணனே. வராகனே. 

457. ஸ்ரீ க்ரதவே நம:

4க்தரிகெ3 ஸுக2 ஒத3கி3ஸுவக்ரதவேநமோ

ஜக3த்ஸ்ருஷ்டி பாலனாதி33 கர்தா சேஷ்டகனு

ஸ்ரீகரனெ நீ பூர்ணக்ஞானாத்மா ஆது33ரிம் க்ரது

அகளங்க ஸுக2சித் ப்ரகாஶமய 4க்தத்ராதா 

பக்தர்களுக்கு சுகத்தை கொடுப்பவனே. க்ரதவே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஜகத் ஸ்ருஷ்டி, காத்தல் ஆகிய செயல்களை செய்பவனே. ஸ்ரீகரனே. நீ பூர்ணஞானத்தைக் கொண்டிருப்பதால், எவ்வித களங்கங்களும் இல்லாதவன். சுக சித் மற்றும் ஒளிமயமானனே. பக்தர்களை காப்பவனே.

***

No comments:

Post a Comment