Friday, May 5, 2023

#155 - 452-453-454 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

452. ஸ்ரீ க்ஷமாய நம:

ஸமர்த்த2னாகி3ருவி நீக்ஷமநமோ நமோ எம்பெ3

ஸமரு அதி4கரு எல்லு எந்தி3கு3 இல்லவந்தா2

ஸமர்த்த2 நீனேவெ ஸர்வகார்ய 3க்ஷனாகி3ருவி

ஸம்யக் பூர்ண ஶ்வர்ய ஸ்ரீயஶஸ் வைராக்3 ஞான வீர்ய 

அனைத்து வித கர்மங்களையும் செய்யும் சமர்த்தனாக இருக்கிறாய். நீ க்‌ஷம எனப்படுகிறாய். உனக்கு என் நமஸ்காரங்கள். உனக்கு சமமானவர்களோ, அதிகமானவர்களோ என்றும் இல்லை. நீயே ஸாமர்த்தியம் கொண்டவன். அனைத்து காரியங்களையும் செய்வித்து, அதனை பார்ப்பவன் நீயே. பூர்ணமானவனே. செல்வம், புகழ், வைராக்கியம், ஞானம், வீரியம் ஆகியவற்றை அளிப்பவனே. 

453. ஸ்ரீ க்‌ஷாமாய நம:

கோ3 நிரோத4 சே2தி3ஸுவவனு நீக்ஷாமநமோ

ஸ்வர்ணாக் ஆதி3தை3த்யன்ன கொந்தி3 பூ4மி உத்34ரனே

க்ஷோணிதா3னி நீ 3லிய நூகி நாக ஶக்ரகி3த்தி

கிருஷ்ண வராஹ வடு வேதோ3த்34 மத்ஸ்ய ஹயாஸ்ய 

பசுக்களை காப்பவனே. நீ க்‌ஷாம எனப்படுகிறாய். உனக்கு என் நமஸ்காரங்கள். ஹிரண்யாக்‌ஷ என்னும் ஆதி தைத்யனை நீ கொன்றாய். பூமியை காத்தவனே. அசுரனான பலியை நீ மிதித்து, பாதாள லோகத்திற்கு அனுப்பினாய். கிருஷ்ணனே. வராகனே. வாமனனே. வேதங்களை காத்தவனான மத்ஸ்யனே. ஹயக்ரீவனே. 

454. ஸ்ரீ ஸமீஹனாய நம:

செந்தா3கி3 4க்தர அபீ4ஷ்ட பூர்ண மாடு3 சேஷ்டா

வந்தனுஸமீஹனநமோ நமோ எம்பெ3 நினகெ3

சேதனாசேதன ஸர்வத்ர இத்து க்ருதிமாடி3ஸி

4க்தக்ருத் பூஜெகொ3லிது3 மோக்ஷஸ்தா2னக்கெ வொய்யுவி 

பக்தர்களின் விருப்பங்களை நன்றாக நிறைவேற்றுபவனே. அனைத்து செயல்களையும் செய்பவனே. ஸமீஹனனே. உனக்கு என் நமஸ்காரங்கள். சேதன, அசேதன ஆகிய அனைத்திலும் இருந்து, செயல்களை செய்விப்பவனே. பக்தர்கள் செய்யும் பூஜைக்கு மகிழ்ந்து தரிசனம் அளிப்பவனே. அவர்களை மோட்சத்திற்கு அனுப்புபவனே.

***


No comments:

Post a Comment