Tuesday, May 16, 2023

#166 - 485-486-487 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

485. ஸ்ரீ 4ர்மக்ருதே நம:

ஸந்தி4 ஸம்ப3ந்த4 மாடு3வவ 4ர்மக்ருத் நமோ எம்பெ3

ஸாது4 ஸஜ்ஜனர ஸம்ப3ந்த4 மாடி3ஸி ஹரிப4க்தி

வ்ருத்3தி4யாகி3 த்வத்ப்ரஸாத3 இத்து ஸலஹுவியோ நீ

ஸாது4 4க்த வாஞ்சிதவ பூரெயிஸுவியோ ஸ்ரீ 

நல்ல ஸம்பந்தங்களை செய்பவனே. தர்மக்ருதே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸாது ஸஜ்ஜனர்களின் சம்பந்தத்தினை செய்து, ஹரிபக்தியை வளர்த்து, உன்னுடைய பிரசாதங்களை கொடுத்து, அருள்கிறாய். அனைத்து பக்தர்களின் விருப்பங்களை நீ நிறைவேற்றுவாய். ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. 

486. ஸ்ரீ 4ர்மகு3பே நம:

4க்த ரக்ஷக நீனு4ர்மகு3ப்நமோ நமோ எம்பெ3

வேத3 4ர்ம ஆசரிஸுவ ஸுஜனபோஷக நீனு

யுதி3ஷ்டிராதி3 பாண்ட3வர ஸம்ரக்ஷிஸிதி3 மத்து

விது3ரோத்34வாதி3 3ஹுப3ஹு 4க்தஸம்ரக்ஷக 

பக்தர்களை காப்பவனே. தர்குபே உனக்கு என் நமஸ்காரங்கள். வேத, தர்மங்களை பின்பற்றும் ஸஜ்ஜனர்களை காப்பவன் நீ. யுதிஷ்டிரன் முதலான பாண்டவர்களை காத்தாய். மற்றும், விதுர, உத்தவ ஆகிய பற்பல பக்தர்களை காத்தாய். 

487. ஸ்ரீ 4ர்மிணே நம:

மஹாத்ம்யவந்த நீனு 4ர்மீ நமோ எம்பெ3 நினகெ3

மஹா நின்னய நிர்தோ3ஷகு3 க்ரியாதி33ளெல்ல

மஹாத்மவு ஸ்வரூப 4ர்ம அனந்தவாகி3ஹவு

மஹாத4ர்மக3ளு நின்ன அதீ4னவு ஸர்வத3லு 

பெரும் மகிமைகளை கொண்டவன் நீ. தர்மிணே உனக்கு என் நமஸ்காரங்கள். உன்னுடைய நிர்தோஷ குணங்கள், செயல்கள் அற்புதமானவை. உன்னுடைய ஸ்வரூப தர்மம் அனந்தமானது. அனைத்து மஹா தர்மங்களும் உன் அதீனமானவையே.

***


No comments:

Post a Comment