ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
470. ஸ்ரீ ஸுஹ்ருதே3 நம:
ஸம்பூர்ண க்3ரஹிஸுவனு ப4க்தக்ருத ஸ்துதியன்ன
ஸ்ரீப ‘ஸுஹ்ருத்’ நமோ நினகெ3 ஈ ஸ்தோத்ர ஸ்வீகரிஸோ
ஶோப4னஸுபூர்ண மனஸ்ஸுள்ளவனு ஸுஹ்ருத் நீனு
ஸ்வப4க்த க்ருதஸேவெ ஸ்வீகரிஸி ஶோப4னவீவி
பக்தர்கள் செய்யும் ஸ்துதிகளை முழுமையாக ஏற்றுக் கொள்பவனே. ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. ஸுஹ்ருதனே உனக்கு என் நமஸ்காரங்கள். இந்த ஸ்தோத்திரத்தையும் ஏற்றுக் கொள். மங்களகரமானவனே. பூர்ணமான மனஸ் உள்ளவனே. பக்தர்கள் செய்யும் சேவைகளை ஏற்றுக் கொண்டு, அவர்களை அருள்பவனே.
471. ஸ்ரீ மனோஹராய நம:
ஸோமப்ராஶன மாடு3வ ‘மனோஹர’ நமோ நமோ
ப்ரேமதி3ந்த3 ப4க்தரு அர்ப்பிஸுவ பூஜாத்3ரவ்ய
ஸுபவித்ர நைவேத்3ய வஸ்துக3ள ஸ்வீகரிஸுவி
கோ3பிகாதி3 ப4க்தமன நின்னல்லி நெலஸிகொண்டி3
ஸோமரஸத்தினை ஏற்றுக் கொள்ளும் மனோஹரனே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்கள் அர்ப்பிக்கும் பூஜா த்ரவியங்களை, பவித்ரமான நைவேத்ய பொருட்களை அன்புடன் ஏற்றுக் கொள்கிறாய். கோபிகையர்கள் முதலான பக்தர்களின் மனம் உன்னில் நிலைத்திருக்கிறது.
472. ஸ்ரீ ஜிதக்ரோதா4ய நம:
ஸோமகா4தக பக்ஷியனு ஜயிஸுவ ஶ்யேன
எம்ப3 பக்ஷியுள்ள ‘ஜிதக்ரோத4னே’ நமோ நினகெ3
ப்ரேமதி3 ப4க்தரு அர்ப்பிப பூஜா கா4தக தை3த்ய
ஸமூஹவ பராஜய மாள்ப ப்4ருத்யருள்ளவனு
ஸோம காதக என்னும் பறவையை வெல்வதான கருடனைக் கொண்டிருப்பவனே. ஜிதக்ரோதனே. உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தியுடன், அன்புடன் பக்தர்கள் அர்ப்பணம் செய்யும் த்ரவ்யங்களை ஏற்றுக் கொள்பவனே. தைத்ய சமூகத்தினை வெல்பவனே. பக்தவத்ஸலனே.
***
No comments:
Post a Comment