ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
449. ஸ்ரீ மஹாமகா2ய நம:
மஹாஹிம்ஸெ மாடு3வவர்க3ளன்னு ஸீளுவவனு
‘மஹாமக2’ நமோ எம்பெ3 த4ர்மக்கு யக்ஞக்கு ஸ்வாமி
மஹாமுனி யக்ஞஹிம்ஸக தாடக ஸுபா3ஹுவ
மஹா அஸுர கேஶி பகாதி3க3ளன்ன முரிதி3
பிறரை துன்புறுத்துபவர்களை கொல்பவனே. மஹமகனே. உனக்கு
என் நமஸ்காரங்கள். தர்மங்களுக்கும், யக்ஞங்களுக்கும் நீயே ஸ்வாமியாக இருக்கிறாய். மஹாமுனிவனே.
யக்ஞத்தை தடை செய்தவர்களான தாடக, ஸுபாஹு, கேஶி,
பக ஆகிய மஹா அஸுரர்களை கொன்றவனே.
450. ஸ்ரீ நக்ஷத்ரனேமினே நம:
நக்ஷத்ர எந்த3ரெ அனஷ்வர அனஷ்வரகர்மா
‘நக்ஷத்ரனேமி’ நீ மாடு3வி நமோ எம்பெ3 நினகெ3
நக்ஷத்ர ஜ்யோதிஸ்சக்ர ஆதா4ர ஈஷ ஶிம்ஶுமார
நக்ஷத்ர நாஶரஹித ப4க்தர்க்கெ3 ஸ்வாமி ஆதா4ர
நக்ஷத்ர என்றால் நிரந்தரமானவன். நிரந்தரமான செயல்களை
செய்பவன். நக்ஷ்த்ரநேமி. நீயே இத்தகைய செயல்களை செய்கிறாய். உனக்கு என் நமஸ்காரங்கள்.
ஜ்யோதிஷ் சக்ரத்திற்கு ஆதாரகனே. ஈஶனே. ஶிம்ஶுமாரனே. அழிவில்லாதவனே. பக்தர்களுக்கு ஸ்வாமியே நீயே
ஆதாரமானவன்.
451. ஸ்ரீ நக்ஷத்ரிணே நம:
ஆபா3தி4த கர்மவுள்ள ‘நக்ஷத்ரீ’ நமோ நினகெ3
பாபபுண்ய கர்மகாரி பூ4ஜனர வோலு அல்ல
ஸ்ரீப நீ ஸத்யஸங்கல்ப ஆபா3தி4த ஸர்வகர்தா
தீ3ப்த ரவி ஸோம தாராதி3க3ளிகெ3 ஆஶ்ரயனு
தனக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லாத கர்மங்களை செய்பவனே.
நக்ஷத்ரிணே உனக்கு என் நமஸ்காரங்கள். பாப, புண்ய கர்மங்களை மக்கள் மூலமாக செய்விப்பவனே.
ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. நீ ஸத்யஸங்கல்பன். அனைத்து வித கர்மங்களை செய்பவன். ஒளி
பொருந்தியவனே. சூரியன், சந்திரன், நட்சத்திரங்களுக்கு ஒளி கொடுப்பவனே, ஆதரவு அளிப்பவனே.
***
No comments:
Post a Comment