ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
479. ஸ்ரீ அனேக கர்மக்ருதே நம:
நின்ன ப4க்தர பித்ராதி3க3ள்கெ3 ஸுக2வாஸதா3தா
‘அனேக கர்மக்ருத்’ நமோ ஸ்ருஷ்ட்யாதி3கர்த நீனு
நின்ன ப4க்த ப்ரஹ்லாத3ன பித்ராதி3க3ள்கெ3 ஸத்க3தி
ஸுக2ஸ்தா2ன வித்தி வர தா3னாதி3 கர்மக்ருத் நீனு
உன் பக்தர்களின் பித்ரு வரிசைகளுக்கு சுகமான இருப்பிடத்தை தருபவனே. அனேக கர்மக்ருதே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ருஷ்ட்யாதி அனைத்து செயல்களையும் செய்பவனே. உன் பக்த பிரகலாதனின் பித்ருகளுக்கு ஸத்கதியை அளித்தவனே. அனைத்து செயல்களையும் செய்பவனே.
480. ஸ்ரீ வத்ஸராய நம:
நீனு எல்லு ஸமவாகி3 இருவி ‘வத்ஸர’ நமோ
ஸ்தா2னபே4த3தி3 நின்னய பூர்ணத்வக்கெ பே4த4வில்ல
கிருஷ்ண நின்ன காருண்ய ஏனெம்பெ3 வத்ஸக3ள காய்தி3
விஷ்ணுராதன்ன பொரெதி3 அஸுர வத்ஸன்ன ஸீள்தி3
அனைத்து இடங்களிலும், அனைவரிலும் நீ பாரபட்சம் இன்றி இருக்கிறாய். வத்ஸரனே உனக்கு என் நமஸ்காரங்கள். உன் அவதார, ரூபங்களிடையே பூர்ணத்வத்திற்கு பேதம் இல்லை. கிருஷ்ணனே உன் காருண்யத்தை நான் என்னவென்று புகழ்வேன்?. பசுக்களை காத்தவனே. அபிமன்யுவின் மகனான பரிக்ஷித்தை (விஷ்ணுராத) காத்தாய். அசுரர்களை அழித்தாய்.
481. ஸ்ரீ வத்ஸலாய நம:
கா3யத்ரி ஸோமாதி3க3ள ஸ்வீகரிஸுவ ‘வத்ஸலா’
தோயஜாக்ஷனே நமோ கா3னத்ராணகர்த கோ3பால
காயவாங்மனதி3ந்த3 ப4க்தி பெ3ளஸுவவரிகெ3
த3யவ பாலிஸி இஹபரதி3 ஸுக2கொடு3வி
காயத்ரி மந்திரங்களை, ஸோமரஸங்களை ஏற்றுக் கொள்பவனே. வத்ஸலனே. உனக்கு என் நமஸ்காரங்கள். தாமரைக் கண்ணனே. உலகத்தை காப்பவனே. கோபாலனே. உடல், வாக்கு, மனஸ் ஆகியவற்றால் பக்தியை வளர்ப்பவர்களுக்கு அருள் புரிந்து, இஹ பரங்களில் சுகத்தை கொடுப்பவனே.
***
No comments:
Post a Comment