ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
491. ஸ்ரீ ஸஹஸ்ராம்ஶவே நம:
ப்ரக்2யாத த்3யாவப்ருது2வி வ்யாபகனெ ‘ஸஹஸ்ராம்ஶு’
ப4க3வான் நமோ ஞான தேஜஸ்புஞ்ச அமிதாம்ஶு
ஜகி3ஜகி3ப ஜ்யோதிர்மய ஸுத3ர்ஶனதா4ரியே
அகளங்க ஸுக்ஞானி ப4க்தரலி ப்ரஜ்வலிஸுதி
அனைத்து உலகங்களிலும் வ்யாபித்திருப்பவனே. ஸஹஸ்ராம்ஶனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஞான, தேஜஸ்ஸினை அபாரமான
கொண்டிருப்பவனே. ஒளிர்பவனே. ஸுதர்சன சக்கரத்தை தாங்கியவனே. களங்கமற்றவனே. ஸுக்ஞானியே.
பக்தர்களில் நீ ஒளிர்கிறாய்.
492. ஸ்ரீ விதா4த்ரே நம:
விஶேஷேண ஸோமபான மாடு3வ ‘விதா4தா’ நமோ
விஶேஷேண தா4ரகனு நீ ஆது3த3ரிம் விதா4தா
ஹ்ரீ ஸ்ரீ ஸமேத க3ருடோ3பரி குளிதிருவி நீ
வஸுத்3ரவ்ய ரத்னாதி3க3ள ப4க்தரிகெ3 கொடு3வி
ஸோமபானத்தை செய்பவனே. விதாத்ரே உனக்கு என் நமஸ்காரங்கள்.
அனைத்தையும் தரித்திருப்பவனே. ஆகையால் நீ விதாதா எனப்படுகிறாய். லட்சுமிதேவியுடன் நீ
கருடனில் அமர்ந்திருக்கிறாய். உன் பக்தர்களுக்கு நீ த்ரவ்ய, ரத்ன ஆகியவற்றை அருள்கிறாய்.
493. ஸ்ரீ க்ருதலக்ஷ்மணாய நம:
யதா2யோக்3ய நியமேன ஸர்வரிந்த3 ப்ரார்த்த2னீய
‘க்ருதலக்ஷண’ நமோ ஸர்வ தே3வ நராதி3 ஸ்வாமி
ஜக3த்ஸ்ருஷ்டி ஸ்தி2திலய நியதி ஞான அஞ்ஞான
ப3ந்தமோக்ஷ கர்த்ருத்வ லக்ஷணவான் ஸர்வேஶ ஸ்ரீஶ
அனைவராலும் அவரவர் யோக்யதைக்கேற்ப பிரார்த்தனை செய்யப்படுபவனே.
க்ருதலக்ஷ்மணனே உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்து தேவ, நரர்களுக்கும் ஸ்வாமியே. ஜகத்
ஸ்ருஷ்டி, ஸ்திதி, லய, நியமன, ஞான, அஞ்ஞான, பந்த, மோக்ஷ ஆகிய அஷ்ட கர்த்ருத்வங்களையும்
செய்பவனே. ஸர்வேசனே. ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே.
***
No comments:
Post a Comment