ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
807. ஸ்ரீ அர்க்காய நம:
பூஜனீய ஆனந்தரூப ‘அர்க’ நமோ நினகெ3
நைஜ ஸ்வதந்த்ர அதிஶய ஆனந்த3 ஸ்வரூபனு
அர்ச்சனார்ஹ நீனாத்3த3ரிந்த3 அர்கனெந்தெ3னிஸுவி
ஆஶ்சர்யஜனக அபரிமித ப்ரகாஶ அர்க
பூஜிக்கத்தக்க ஆனந்தரூபனே. அர்கனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரனே. அதிஷய ஆனந்த ஸ்வரூபனே. அர்ச்சனைக்கு உகந்தவன் நீயே ஆனதால், அர்க என்று அழைக்கப்படுகிறாய். மகிழ்ச்சியை கொடுப்பவனே. அபாரமான ஒளி பொருந்தியவனே. சூரியனே.
808. ஸ்ரீ வாஜஸனாய நம:
அன்ன கொடு3வவ நீனு ‘வாஜஸனே’ நமோ எம்பெ3
ஞானானந்த3 புஷ்டி பூர்ணத்ருப்தி ஸதா3 உள்ளவனு
அன்ன நீரு வாஜவுஸன: எந்த3ரெ ஸதா3 உள்ள
பூர்ணபூஷ ஏகர்ஷி யம ஸூர்ய ப்ரஜாபதிய
அன்னத்தை அருள்பவனே. வாஜஸனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஞானானந்த மயனே. அபாரமான, பூரணமான திருப்தியை எப்போதும் கொண்டவனே. அன்னம், தண்ணீர் ஆகியவற்றை எப்போதும் கொண்டவனே. ஸ்ரீஹரியே. யம, ஸூர்ய, பிரஜாபதியின் தலைவனே.
809. ஸ்ரீ ஶ்ருங்கி3ணே நம:
ஶத்ருக3ள ஹிம்ஸாயுள்ள ‘ஶ்ருங்கீ3’ நமோ நமோ எம்பெ3
சித்3ரூப மத்ஸ்ய வராஹ தை3த்யருக3ள ஸீள்தி3
பா4ரி ஸ்வர்ண சாமீகர ஆப4ரண வாஸஸனு
பரமோச்ச ஸுக2ரூப ஸ்ரீகர நாராயணனு
எதிரிகளின் எதிரியாக இருப்பவனே. ஷ்ருங்கியே உனக்கு என் நமஸ்காரங்கள். சித்ரூபனே. மத்ஸ்யனாக, வராஹனாக வந்து தைத்யர்களை கொன்றாய். தங்கமயமான அபாரமான ஆபரணங்களை தரித்தவனே. ஸர்வோத்தமனே. ஸுகரூபனே. ஸ்ரீகர நாராயணனே.
***