Saturday, September 16, 2023

#265 - 783-784-785 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

783. ஸ்ரீ சதுர்பா4வாய நம:

பிதா நீனே மாதா நீனே 3ந்து4 நீனெந்து3 பே3டு3

4க்தரிகெ3 ரீதி 3ந்தொ33கு3விசதுர்பா4

மாத4 நமோ நீ ஸ்வதந்த்ர நிர்தோ3 ஸுகு3ணாப்3தி4

ஸ்ரீ வாஸுதே3 ஸங்கர்ஷண ப்ரத்4யும்ன அனிருத்34 

நீயே எங்களின் தந்தை, தாய், உற்றார், உறவினர் என்று வணங்கும் பக்தர்களுக்கு, உடனடியாக வந்து அருள்பவனே. சதுர்பாவனே. மாதவனே. உனக்கு என் நமஸ்காரங்கள். நீ ஸ்வதந்த்ரன். நிர்தோஷன். நற்குணங்களின் கடல். ஸ்ரீவாஸுதேவனே. ஸங்கர்ஷணனே. ப்ரத்யும்னனே. அனிருத்தனே. 

784. ஸ்ரீ சதுர்வேத3 விதே3கபதே3 நம:

ரிக்3யஜுஸ்ஸாமாத2ர்வண வேத3தி3ந்த3 வேத்3யவாத3

முக்2யஸ்வரூபவான்சதுர்வேத3விதே3கபாத் நமோ

ஸகல வேத33ளன்னு பூர்ண அரிதவ நீனு

வேத33 முக்2யரக்ஷக பு3த்3தி4யொளிட்டுக்கொண்டு 

ரிக், யஜுர், ஸாம, அதர்வண ஆகிய நான்கு வேதங்களால் போற்றப்படுபவனே. முக்ய ஸ்வரூபனே. சதுர்வேத விதேகபதயே உனக்கு என் நமஸ்காரங்கள். அனைத்து வேதங்களையும் முழுமையாக அறிந்தவன் நீ. வேதங்களை, உன் புத்தியில் வைத்துக் கொண்டு காப்பவன் நீயே. 

785. ஸ்ரீ ஸமாவர்த்தாய நம:

ஶ்ரேஷ்டதம யஷஸ்ஸின வ்யாப்தியுள்ளஸமாவர்த்த

ஶ்ரேஷ்டதம நமோ நினகெ3 உத்தம ஸ்லோக ஸ்ரீ

உத்க்ருஷ்ட நின்னய மஹாமஹிமெ ஸர்வத்ர ஸர்வதா3

ஶ்ரேஷ்ட 4க்த கீர்த்திதனு ஸர்வத்ர ஸமப3லாட்4 

சிறந்ததான புகழினை கொண்டவனே. ஸமாவர்த்தனே. உனக்கு என் நமஸ்காரங்கள். உத்தமனே. ஸ்ரீஷனே. உன்னுடைய மகாமகிமை அபாரமானது. அனைத்து இடங்களிலும், எப்போதும் சிறந்த பக்தர்களால் வணங்கப்படுபவனே. அனைத்து இடங்களிலும் சம பலன்களை அருள்பவனே. 

****


No comments:

Post a Comment