Wednesday, September 6, 2023

#255 - 753-754-755 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

753. ஸ்ரீ சந்த3னாங்க3தி3னே நம:

தே3வர்க3 தோ1ஷிஸுவ ஹவிஸ்ஸாதி3 அர்ப்பிஸுவ

தி3வ்யயக்3 மாள்ப 4க்தனிந்த3 பூஜ்யனாகி3ருவ

ஸ்ரீவரனேசந்தனாங்க3தி3நமோ எம்பெ நினகெ3

ஸர்வதா3ஹ்லாத3 ஆனந்த3பூர்ண ஸ்ரீகரார்ச்சித 

தேவர்களை காப்பவனான; ஹவிஸ் ஆகியவற்றை அர்ப்பணம் செய்யும் பக்தர்களால் பூஜிக்கப்படுபவனான; ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே; சந்தனாங்கதினே உனக்கு என் நமஸ்காரங்கள். எப்போதும் ஆனந்தமயமானவனே; ஸ்ரீலட்சுமிதேவியால் பூஜிக்கப்படுபவனே. 

754. ஸ்ரீ வீரஹா நம:

விமல விஶிஷ்டஞான ஸாத4னயக்ஞ ப்ராபக

ஸ்வாமிவீரஹாநமோ 4க்தபோஷக ஶத்ருஹந்தா

நைமிஷாரண்ய அனிமிஷ க்ஷேத்ரதி3 ஞானயக்ஞ

ரமாபதி நீனு ஒத3கி3ஸுவி ஹாகெ3 என்னல்லு 

தூய்மையான, மிகச் சிறந்ததான ஞானத்தினால், யக்ஞ சாதனங்களால் அறியப்படுபவனே; ஸ்வாமியே, வீரஹா உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்களை காப்பவனே. எதிரிகளை கொல்பவனே. நைமிஷாரண்ய க்‌ஷேத்திரத்தில், செய்யப்படும் ஞான யக்ஞங்களுக்கு, ஸ்ரீரமாபதியான நீ, அருள் புரிகிறாய். 

755. ஸ்ரீ விஷமாய நம:

விஶேஷவாகி3 மஹாஸாது4விஷயநமோ எம்பெ3

ஶேஷஶாயி ப்ரத்3யும்ன வாஸுதே3 ஆதி3வராஹ

ஸ்ரீ நாராயணானிருத்34 ந்ருஸிம்ஹ ஸங்கர்ஷண

ருக் ஸாமஸ்துத்ய ஹிதகர ஸ்ரீ மன் நாராயண 

மஹா ஸாது விஷயனே. உனக்கு என் நமஸ்காரங்கள். சேஷஸாயியே. ப்ரத்யும்னனே. வாஸுதேவனே. ஆதிவராகனே. ஸ்ரீ நாராயணனே, அனிருத்தனே, நாரசிம்மனே, ஸங்கர்ஷணனே, ருக், ஸாம வேதங்களால் போற்றப்படுபவனே. பக்தர்களை அருளும் ஸ்ரீமன் நாராயணனே. 

***


No comments:

Post a Comment