ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
759. ஸ்ரீ சலாய நம:
கள்ளரன்ன ஸீளி பி3ஸுடு3வ ‘சல’ நமோ எம்பெ3
கள்ளரு அஸத்யவாதி3க3ளு ஹரிகு3ருக3ள
ஒள்ளே ஹிரியரலி ப4க்திவிரோதி4யாகி3ருவ
அலக்ஷ்ம்ய மனோகாய குசர்யர நிக்3ரஹிஸுவி
துஷ்டர்களை கொன்று குவிக்கும் ‘சலனே’ உனக்கு என் நமஸ்காரங்கள். திருடர்கள், பொய் பேசுபவர்கள், ஹரிகுருகளில், நல்ல மூத்தவர்களில், அவர்களின் விரோதியாக இருக்கும், மனதினால், வாக்கினால், கெட்ட செயல்களை செய்பவர்களை நீ கொல்கிறாய்.
760. ஸ்ரீ அமானினே நம:
ஶோப4னதம பு3த்3தி4வந்தனு ‘அமானி’ நமஸ்தே
அபி4மான காயாதி3 மனோவிகார நினகி3ல்ல
அப்ராக்ருத மஹைஶ்வர்ய ஸ்வரூப பூர்ணகாமனு
ப்ரபு4 நீனு அங்கா3ங்கி3 ஸர்வேந்த்3ரிய அபி4ன்னானந்த3
அழகான வடிவம் கொண்டவனே. ஸர்வக்ஞனனே. அமானியே உனக்கு என் நமஸ்காரங்கள். தேக அபிமானம், தேக மாற்றங்கள் உனக்கு இல்லை. அப்ராக்ருத சரீரம் கொண்டவனே. மஹத் ஐஸ்வர்ய ஸ்வருபத்தை கொண்டவனே. பூர்ணகாமனே. நீயே அனைவரின் தலைவன். உன் சரீரத்தில் அனைத்து அங்கங்களும் அபின்னமானவை.
761. ஸ்ரீ மானதா3ய நம:
ஞான கொடு3வவ நீனே ‘மானத3’ நமோ நினகெ3
ஞானஹேது பாட2வு ஜிக்ஞாஸு வாத3 ப்ரவசன
ஞானிகு3ரு அந்தர்க3தனாகி3 போ3தி4ஸி நிஸ்சித
ஞானவீவி ப4க்த உபாஸனகொ3லிது3 அபரோக்ஷ
ஞானம் கொடுப்பவன் நீயே. மானதனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஞானத்திற்கு காரணமானவனே. பாடம் படிக்கும் ஜீவர்களில், வாத, பிரவசன செய்யும் ஞானி குருகளின் அந்தர்கதனாகி இருந்து அவர்களுக்கு போதித்து யதார்த்த ஞானத்தை கொடுக்கிறாய். பக்தர்களின் உபாஸனைக்கு மகிழ்ந்து அவர்களுக்கு அபரோக்ஷ ஞானத்தை அளிக்கிறாய்.
***
No comments:
Post a Comment