ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
747. ஸ்ரீ லோகநாதா2ய நம:
லோகஸ்வாமியு நீனு ‘லோகநாத2னே’ நமோ எம்பெ3
அகளங்க ஞானபூர்ண ஸர்வக்3ஞ எனிப நீனு
ப4க்தரிகெ3 அக்ஞான களெது3 ஸக்3ஞான கொடு3வ
ஸ்ரீகாந்த நீ பி3ரம்மஷிவேந்த்3ராதி3 ஸர்வரிகு3 ஸ்வாமி
லோகஸ்வாமியே. லோகநாதனே. உனக்கு என் நமஸ்காரங்கள். அபாரமான ஞானபூர்ணனே. ஸர்வக்ஞனே. பக்தர்களின் அஞ்ஞானங்களை களைந்து, ஸுக்ஞானத்தை அருள்கிறாய். ஸ்ரீகாந்தனே. பிரம்ம, சிவ, இந்திர என அனைவருக்கும் நீயே ஸ்வாமி.
748. ஸ்ரீ மாத4வாய நம:
ஸ்துதியிந்த3 ப்ராப்தனாகு3வ ‘மாத4வ’ நமோ எம்பெ3
ஸ்தோத்ர நின்னய ஞானானந்த3 ப3லகு3ணக3ளன்ன
ஸ்ரத்3தா4 ஸ்னேஹயுதவாகி3 இருவத3ரிந்த3 நீனு
ப்ராப்தனாகு3வி ப4க்தப்ரிய வேத3 ஸாமாதி3ஸ்துத்ய
ஸ்துதி, ஸ்தோத்திரங்களால் அறியப்படுபவனே. மாதவனே. உனக்கு என் நமஸ்காரங்கள். உன்னுடைய ஞான, ஆனந்த, பல, குணங்களை ஸ்தோத்திரம் செய்தால், ஸ்ரத்தா மற்றும் நட்புடன் (பக்தியுடன்) இதனை செய்தால், நீ, தரிசனம் அளிக்கிறாய். பக்தப்ரியனே. ஸாம வேதங்களால் வணங்கப்படுபவனே.
749. ஸ்ரீ ப4க்தவத்ஸலாய நம:
ப4க்த த4னாதி3 ப்ரேமவந்த ‘ப4க்தவத்ஸல’ நமோ
ப4க்தரு மாடு3வ யக்ஞ பூஜா அர்ப்பிஸுவ த4ன
நைவேத்3ய ஹவிஷ்யாதி3க3ள ஸ்வீகரிஸி வாத்ஸல்ய
ஹிததி3 நீ மாடு3வி ப4க்தவத்ஸல க்ருபாஸிந்து4
அனைத்து பக்தர்களாலும் வணங்கப்படுபவனே. பக்தவத்ஸலனே. உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்கள் செய்யும் யக்ஞ, பூஜைகளுக்கு; அவர்கள் அர்ப்பணம் செய்யும் செல்வம், நைவேத்தியம், ஹோம ஹவிஸ் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டு, நீ உன்னுடைய அருளை அளிக்கிறாய். ஹே பக்தவத்ஸலனே. ஹே கருணைக்கடலே.
***
No comments:
Post a Comment