Saturday, September 9, 2023

#258 - 762-763-764 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

762. ஸ்ரீ மான்யாய நம:

முக்2யவாயு விபஶேஷ ஶிவ ஶக்ராதி33ளிந்த3

பூஜ்யனு நீனுமான்யநமோ நமோ எம்பெ3 நினகெ3

மான்ய முக்2யஞானக்கெ விஷயனாகி3ருவவனு

மான்ய மத்து பி3ரம்மாதி3 ஜீவரிம்பி3ன்னனு ஸ்வாமி 

முக்யபிராணர், கருட, சேஷ, ருத்ரர், இந்திரர் ஆகியோரால் வணங்கப்படுபவனே. மான்யனே உனக்கு என் நமஸ்காரங்கள். யதார்த்த ஞானத்திற்கு தரிசனம் அளிப்பவனே. அதற்கு விஷயனாக இருப்பவனே. பிரம்மாதி அனைத்து ஜீவர்களாலும் நீ வேறுபட்டு இருக்கிறாய். ஸ்வாமியே. 

763. ஸ்ரீ லோகஸ்வாமினே நம:

லோகத்3ருஷ்டா நீனு காந்தி காஞ்சன வர்ச்சஸ்ஸு த்3ரவ்ய

நிஷ்க ரத்னாதி3 4னஹேது ஸ்தோத்ராதி3யிம் ஸ்துத்ய

லோகஸ்வாமிநமோ எம்பெ3 மமஸ்வாமி ஸர்வஸ்வாமி

ஸ்ரீகரனே ஸ்ரீத3னே ஸ்ரீரமாபதே ஸர்வத்ராத 

உலகத்தை காப்பவன் நீயே. ஒளி, செல்வம், புகழ், பொருள், ரத்னம் முதலான செல்வங்களுக்கு காரணம் ஆனவனே. ஸ்தோத்திரங்களால் வணங்கப்படுபவனே. லோகஸ்வாமியே. உனக்கு என் நமஸ்காரங்கள். என்னுடைய ஸ்வாமியே. அனைவரின் ஸ்வாமியே. ஸ்ரீகரனே. ஸ்ரீதேவியின் தலைவனே. அனைவரையும் காப்பவனே. 

764. ஸ்ரீ த்ரிலோக த்4ருஷே நம:

அனக4 மூரு வேத3தி3ந்த3 வேத3யக்ஞ நிர்மாதா நீ

ஸ்ரீநிதி4த்ரிலோகத்4ருக்நமோ கல்யாணதம ஆத்மா

அனுபம மஹிம நீ ஸர்வலோகதா4ரகனு

நீனேவெ ஸர்வாதா4 த்3யுப்வாத்3யாயதன ஸ்வஶப்3தா4த் 

குறைகள் அற்றவனே. மூன்று வேதங்களால் போற்றப்படுகிறவனே. அவற்றை (யக்ஞங்களை) நிர்மாணம் செய்தவனே. ஸ்ரீநிதியே. த்ரிலோக த்ருஷே உனக்கு என் நமஸ்காரங்கள். உத்தமமான கல்யாண குணங்களை கொண்டவனே. ஆத்மனே. ஒப்பில்லா மகிமைகளை கொண்டவனே. நீயே அனைத்து உலகங்களையும் தரித்திருக்கிறாய். நீயே அனைவருக்கும் ஆதாரம் ஆனவன். 

***


No comments:

Post a Comment