ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
786. ஸ்ரீ நிவ்ருத்தாத்மனே நம:
நிதராம் வ்ருத்த ஸகல விஷயத3ல்லி ப்ரவ்ருத்தி
மந்த த4னாதி3தா3தா ‘நிவ்ருத்தாத்மா’ நமோ நினகெ3
தை3த்யரு து3ஷ்டரு அயோக்3ய ஜனருக3ளிந்த3
க்ருதயக்ஞ பூஜாதி3க3ளலி உதா3ஸீன மாள்பி
உலகில் இருக்கும் அனைத்து விஷயங்களில் வியாபித்திருப்பவனே. செல்வங்களை அருள்பவனே. நிவ்ருத்தாத்மனே உனக்கு என் நமஸ்காரங்கள். தைத்யர்கள், துஷ்டர்கள், அயோக்யர்கள் ஆகியோர் செய்யும் யக்ஞ, பூஜைகளை உதாசீனம் செய்பவனே.
787. ஸ்ரீ து3ர்ஜயாய நம:
ஶத்ருக3ளிம் ஜயிஸலிகெ அஶக்யபா3ஹு ப3ல
வந்த ‘துர்ஜய’ நமோ நினகெ3 லக்ஷ்மீ நரஸிம்ஹ
ஸைந்த4வாஸ்ய மத்ஸ்ய கோல ந்ருஸிம்ஹ வாமன ராம
ஸிந்து3ப4ந்தனராம தே3வகீஸுத பு3த்3த4 கல்கி
எதிரிகளால் வெல்லப்பட முடியாத தோள்வலிமை கொண்டவனே. துர்ஜயனே உனக்கு என் நமஸ்காரங்கள். லட்சுமி நரசிம்மனே. கடலில் வசிப்பவனே (கூர்மனே). மத்ஸ்ய, வராகனே, நரசிம்மனே, வாமனனே, பார்க்கவ ராமனே, சிந்து பந்தனம் செய்த ராமனே, தேவகியின் புத்திர கிருஷ்ணனே, புத்தனே, கல்கியே.
788. ஸ்ரீ து3ரதிக்ரமாய நம:
து4ரத்யய ஶக்திமந்த ‘து3ரதிக்ரம’ நமோ எம்பெ3
ஹரியே நீ மஹாஶக்திமான் நின்ன அதிக்ரமிஸெ
பா3ரி பா3ரி எஷ்டேயத்ன மாடி3தரு அஶக்ய
யாரிகு3 நினகெ3 ஸம அதி4க ஶக்தியில்லவு
கஷ்டங்களை விலக்கும் சக்தி கொண்டவனே. துரதிக்ரமனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீஹரியே நீ அபாரமான சக்தியை கொண்டிருப்பவன். உன்னை வெல்வதற்கு பல முறை என எவ்வளவு முயன்றாலும், அது யாராலும் முடியாது. உனக்கு சமம், அதிக சக்தி கொண்டவர்கள் யாருமில்லை.
***
No comments:
Post a Comment