Thursday, September 14, 2023

#263 - 777-778-779 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

777. ஸ்ரீ 3தா3க்3ரஜாய நம:

ஸ்வர்க்க3ஸ்த2 நீ தே3வர்க3 ஸக23தா3க்3ரஜநமோ

ஶக்ரானுஜ உபேந்த்3ரனே ஶரணு ஸர்வ ஸம்வந்த்ய

கௌமோதி3கி அக்3ரதி3 அஷ்டார்ண ஜபிஸுவ வாயு

ஸுராராஜனொளிப்ப ஸுரர்கெ3 ஸுக2தா3 ஶத்ருஹா 

ஸ்வர்க்கத்தில் இருக்கும் நீ தேவர்களின் நண்பன். கதாக்ரஜனே உனக்கு என் நமஸ்காரங்கள். இந்திரனின் மகனே, உபேந்திரனே. அனைவராலும் வணங்கப்படுபவனே. கௌமோதகி என்னும் கதையை கொண்டவனே. உன் அஷ்ட மஹா மந்திரத்தை ஜெபிக்கும் வாயு, இந்திரன் ஆகியோரின் அந்தர்யாமியாக இருக்கிறாய். தேவர்களுக்கு சுகத்தை அருள்பவனே. எதிரிகளை அழிப்பவனே. 

778. ஸ்ரீ சதுர்மூர்த்தயே நம:

கி3ரிதெரதி3 உச்சனாகி3சதுர்மூர்த்திநமோ

இந்த்3ரா, யாம்யா, தா3ருணி, ஸௌம்யா, புரிக3ள் நால்கரலி

ஸூர்ய நாராயண நீனு மானஸோத்தரதி3 பூஜ்ய

உரு ஸுகல்யாணதம ரூபக3 ஸுகு3ணோச்ச 

மலையைப் போல உயரமாக / உச்சமாக இருப்பவனே. சதுர்மூர்த்தயே உனக்கு என் நமஸ்காரங்கள். இந்த்ரா, யாம்யா, தாருணி, ஸௌம்யா என்னும் நான்கு புரிகளில் ஸூர்ய நாராயணனாக நீ இருக்கிறாய். ஸ்தோத்திர மந்திரங்களால் பூஜிக்கப்படுபவனே. சிறந்த கல்யாண குணங்களை, ரூபங்களை கொண்டவனே. 

779. ஸ்ரீ சதுர்பா3ஹவே நம:

த்ரிபுராதி33 நாஶமாள்பசதுர்பா3ஹுநமோ

ஸுபத்4 அரி ஶங்க2 3தா3த்4யாயுத4தா4ரி நீனு

ஸ்ரீபா43வதோக்திது3ராஸத3ம் ஸார்வ நிசேதர்

யுத4 ப்ரவே வித்3ராமித தை3த்ய தா3னவான்எந்து3 

த்ரிபுர அசுரர்களை கொல்லும் சதுர்பாஹுவே உனக்கு என் நமஸ்காரங்கள். பத்ம, சக்ர, சங்கு, கதா ஆகிய ஆயுதங்களை தரித்தவனே. ஸ்ரீபாகவதம் உன்னை ‘துராஸதம்..’ என்னும் ஸ்லோகத்தால் வர்ணிக்கிறது. 

***


No comments:

Post a Comment