ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
798. ஸ்ரீ இந்த்3ரகர்மணே நம:
இந்த்3ரனந்தெ கர்ம மாடு3வவ நீ ‘இந்த்3ரகர்ம’ நமோ
வ்ருத்ராதி3 ஶத்ரு ஸம்ஹாராதி3 கர்ம இந்த்3ரஸ்த2 இந்த்3ர
நின்னிந்த3 க்ருத இந்த்3ர ஶப்3த3தி3 முக்2யவாச்ய நீனு
கர்தா காரயிதா ஸ்வதந்த்ரா ஸர்வாந்தர்யாமி ஸ்வாமி
இந்திரனைப்
போல கர்மங்களை செய்பவனே. நீ இந்திரகர்ம - உனக்கு என் நமஸ்காரங்கள். வ்ருத்ராஸுர முதலான
எதிரிகளை கொல்பவனே. இந்திரனில் இருப்பவனே. இந்திரன் உன்னாலேயே அனைத்து செயல்களையும்
செய்கிறான். இந்திர என்னும் சொல் முக்கியமாக உன்னையே குறிக்கிறது. அனைத்தையும் செய்பவன்,
செய்விப்பவன், ஸ்வதந்த்ரன், ஸர்வரின் அந்தர்யாமியாக இருப்பவன் நீயே. ஸ்வாமி.
799. ஸ்ரீ மஹாகர்மணே நம:
அமிதகர்மனு ‘மஹாகர்ம’ நமோ நமோ எம்பெ3
பி3ரம்மாண்ட3 நிர்மாண ஜக3ஸ்ருஷ்டிபாலன ஸம்ஹார
நியமன ஞானsஞான ப3ந்த4 மோக்ஷ முக்தாஸ்ரய
இந்த2 மஹாகர்ம ஸ்வப்ரயோஜனரஹித ஆனந்த3லீலா
அபாரமான
கர்மங்களை செய்பவனே. மஹாகர்மணே உனக்கு என் நமஸ்காரங்கள். பிரம்மாண்டத்தை நிர்மாணம்
செய்பவனே. ஜகத்தினை ஸ்ருஷ்டி, ஸ்ருத்தி, ஸம்ஹார, ஞான, அஞ்ஞான, பந்த, மோக்ஷ ஆகிய அஷ்ட
கர்த்ருத்வங்களை செய்பவனே. முக்தர்களின் ஆஸ்ரயனே. இத்தகைய மகாமகிமைகளை கொண்டவனே. இவற்றால்
எவ்வித பிரயோஜனங்களும் இல்லாதவனே. அனைத்தையும் ஆனந்தமாக, லீலைகளாக செய்பவனே.
800. ஸ்ரீ க்ருதகர்மணே நம:
ப4க்தார்த்த2வாகி3 யுத்3தா4தி3 கர்ம மாடு3வவ நீனு
‘க்ருதகர்மா’ நமோ எம்பெ3 ப4க்தஜன ஸம்ரக்ஷக
ப4க்தரிகா3கி3 தி3திஜ ஹிரண்யாக்ஷன்ன கட3தி3
யுத்3த4தி3 ஹேமகஶிபுன்ன ஸீள்தி3 ப4க்தன்ன காய்தி3
உன்
பக்தர்களுக்காக யுத்தம் முதலான செயல்களை செய்பவனே. க்ருதகர்மணே உனக்கு என் நமஸ்காரங்கள்.
பக்தர்களை காப்பவனே. பக்தர்களுக்காக திதிஜனான ஹிரண்யாக்ஷனை கொன்றாய். போரில் ஹிரண்யகசிபுவினை
குடலை கிழித்து கொன்றாய். உன் பக்தனான பிரகலாதனை காத்தாய்.
***
No comments:
Post a Comment