ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
801. ஸ்ரீ க்ருதாக3மாய நம:
வித்3வாம்ஸரன்னு மாள்ப ‘க்ருதாக3ம’ நமோ நினகெ3
வேத3 விபா4க3கெ3ய்து3 தே3வதாவிஷ்ட முனிக3ளிகெ3
போ4தி4ஸிதி3 பை2ல வைஶம்பாயன ஜைமினி ஶுக
ஸுமந்து நாரத3 ப்4ருகு3 ரோமஹர்ஷணாதி3க3ள்கெ3
உன் பக்தர்களை வித்வாம்ஸராக ஆக்குபவனே. க்ருதாகமனே. உனக்கு என் நமஸ்காரங்கள். (வேதவ்யாஸராக) வேதங்களை விபாகம் செய்து, தேவதாம்சம் பொருந்திய முனிவர்களுக்கு அதனை போதித்தாய். பைல, வைஷம்பாயன, ஜைமினி, சுக, சுமந்து, நாரத, ப்ருகு, ரோமஹர்ஷண ஆகியோருக்கு அதனை போதித்தாய்.
802. ஸ்ரீ உத்3ப4வாய நம:
ப4க்தர உத்தம ரக்ஷணெ மாள்ப ‘உத்3ப4வ’ நமோ
உத்தம உபதே3ஶ ஒத3கி3ஸி ஸாத4னகெ3ய்ஸி
க்ஷிதியல்லி து3ஷ்ட உபடள தூ3ரமாடி3 காய்து3
உத்3தா4ர மாள்பி ப3ந்த4தி3ந்த3 த4ன்வந்தரி முகுந்த3
உன் பக்தர்களை உத்தமமான வழியில் காப்பவனே. உத்பவனே உனக்கு என் நமஸ்காரங்கள். அனைவருக்கும் உத்தமமான உபதேசங்களை போதித்து, அவரக்ள் மூலம் சாதனைகளை செய்வித்து, பூமியில் அவர்களுக்கு வருவதான துஷ்ட பிரச்னைகளை விலக்கி, அவர்களை காத்து, அவர்களுக்கு பிறப்பு இறப்புகளை விலக்கி உத்தாரம் செய்கிறாய். தன்வந்திரியே. முகுந்தனே.
803. ஸ்ரீ ஸுந்த3ராய நம:
ஶத்ருக3ள ஸுகா2தி3 நாஶக ‘ஸுந்த3ர’ நமோ
ப4க்த ஸுஜனரிகெ3 ஆனந்த3 ஒத3கி3ஸுவியோ
ஸௌந்த3ர்யஸார தே3வகீஸுத ஸத்யாபை4ஷ்மி நாத2
கந்த3ர்பக3மித லாவண்ய வாமன ப3லிப3ந்த4
எதிரிகளின் சுகங்களை அழிப்பவனே. சுந்தரனே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்களான ஸஜ்ஜனர்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பவனே. அழகு வடிவமான தேவகியின் மகனே. ஸத்யபாமா மற்றும் பைஷ்மியின் நாதனே. மன்மதனைவிட அழகானவனே. வாமனனே பலியை வென்றவனே.
***
No comments:
Post a Comment